தி.மு.க. தலைமையிலான அணிக்கே வாக்களிப்போம் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

தி.மு.க. தலைமையிலான அணிக்கே வாக்களிப்போம் தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் தீர்மானம்

விழுப்புரம், ஏப்.5- தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 2.4.2024 அன்று விழுப்புரத்தில் மாநில தலைவர் பேரா. டாக்டர் மேரி ஜான் தலைமையில் நடை பெற்றது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்ட ணிக்கு ஆதரவு அளிப்பதென இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாழ்த்தப்பட்ட சமூக கிறிஸ்தவர்களுக்கு ஒன்றிய அரசு பட்டியல் இனத்தவர் (எஸ்சி) உரிமையை இன்னும் வழங்கப் படாத நிலையில் தமிழ்நாட்டில் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கான (பிசி) இடஒதுக்கீட்டில் தாழ்த்தப் பட்ட சமூக கிறிஸ்தவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 4.6 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், மதச்சிறு பான்மை மக்களுக்கு பாதுகாப்பும், சமூக நீதியும், அரசியல் சாசன உரிமையும், பெற்றிட இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் செயலாற்ற வேண்டும், திமுக தலைமையிலான இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஅய், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜன நாயக கட்சி ஆகியவை களின் வேட்பாளர்களுக்கே வாக் களிக்க வேண்டுமென தாழ்த் தப்பட்ட சமூக கிறிஸ்தவ மக்களுக் கும், அனைத்து சிறுபான்மை சமுதாய மக்களுக்கும் வேண்டு கோள் விடுத்து, அவர்களின் வாக்குகளை திரட்டவும் இயக்கம் தேர்தல் களப் பணி ஆற்றும் என்பதையும் தெரிவித்து கொண் டனர்.

பிஜேபியின் அடாவடித்தனம் கட்சியில் சேர வலியுறுத்தி கடும் நிர்ப்பந்தம்
பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

பொன்னேரி, ஏப்.5- கூட்டணி வைக்க வலியுறுத்தி பா.ஜனதாவிடம் இருந்து தொடர்ந்து நிர்பந்தம் வந்ததாக பிரேமலதா விஜயகாந்த் பிரச்சார கூட்டத்தில் குற்றச் சாட்டை முன் வைத்தார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம் பியை ஆதரித்து பொன்னேரியில் அக்கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச் சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக தே.மு.தி.க.வின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. அதி.மு.க.வுடன் இணையும்வரை பா.ஜனதாவிடம் இருந்து தொடர்ந்து நிர்பந்தம் வந்தது. அதனை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஜெயலலிதா போல தைரியமாக முடிவெடுத்தேன். பனங்காட்டு நரி சலசலப்பிற் கெல்லாம் அஞ்சாது அதுபோல எத்தனை சோதனைகள் வந்தாலும் அ.தி.மு.க.வுடன் மட்டுமே கூட் டணி என மக்களுக்காக உறுதியாக இருந்தேன்.
ஒன்றியத்தில் ஆளும் பா.ஜானதாவுக்கும். மாநிலத்தை ஆளும் தி.மு.க.விற்கும் இந்த தேர்தலில் சவுக்கடி கொடுக்க வேண்டும். இது ராசியான மக்கள் விரும்பும், தமிழ்நாடே போற்றும் வெற்றிக் கூட்டணி. பா.ம.க. இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது, பா.ஜனதா இருந்தால் இசுலாமியர், கிறித்தவர்கள் வாக்குகள் கிடைக் காது,
-இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment