இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டு இருந்தாரா? காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டு இருந்தாரா? காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி

featured image

 

ஜெய்ப்பூர், ஏப்.5- “இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக்கொண்டிருந்தாரா?” என்று மல்லிகார் ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.
வசை பாடுகிறார்
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் என்ற இடத்தில் நேற்று (4.4.2024) காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியாகாந்தி குடும்பத்தை வசைபாடுவதில்தான் கவன மாக இருக்கிறார்.
கடந்த 1989ஆம் ஆண்டில் இருந்து சோனியாகாந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும்பிரதமராகவோ, அமைச்சரா கவோ இருந்தது இல்லை. இருப்பினும், வாரிசு அரசியல் என்று பேசுகிறார்.
பொய்களின் தலைவர்
மக்களை சித்ரவதை செய்து, தன்னுடன் வைத்துக் கொள்ள பிரதமர் மோடி விரும்புகிறார். அவர் எப்போதும் பொய் பேசுகிறார். அவரை பொய்களின் தலைவர்’ என்று சொல்லலாம். பிரதமர் மோடி, மற்ற நாட்களில் உலகம் முழுவதும் சுற்றுகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் செல்கிறார். ஆனால் கலவரம் நடந்த மணிப் பூருக்கு மட்டும் செல்வது இல்லை.
56 அங்குல மார்பு
மோடி தன்னை 56 அங்குல மார்பு கொண்டவன். பயப்படமாட்டேன் என்று சொல்கிறார். நீங்கள் பயப்படா விட்டால். சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை விட்டுக் கொடுத்தது ஏன்? சீன ராணுவம் ஊடுருவிய போது, மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அவர் தூக்க மாத்திரை போட் டிருந்தாரா? -இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment