சிறீநகர், ஏப். 5- காஷ்மீரில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில், பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 3 தொகுதிகளில் தேசிய மாநாடு கட்சி போட்டியிடுகிறது. அதேநேரம் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 2 தொகுதிகளில் காங்கிரஸ் களமிறங்கி இருக்கிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பதாக தேசிய மாநாடு துணைத் தலைவரும், மேனாள் முதல மைச்சருமான உமர் அப்துல்லா தெரிவித்தார். காஷ்மீரில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment