சென்னை,ஏப்.4– தோல்வி பயத் தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளைப் போட்டு பாஜ நெருக்கடி கொடுத்து வரு கிறது. டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட் டுள்ளார். இதனால் டில்லி, பஞ்சாப், அரி யானா, ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் பாஜவுக்கு பெரும் பின் னடைவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
குஜராத்தில் கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது கூட ஆம் ஆத்மி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற் றது. இப்போது காங்கிரசுடன் கூட் டணி வைத்துள்ளது.
இதனால் குஜராத்திலேயே கஷ்டப்பட்டுத்தான் வெற்றி பெற வேண்டிய நிலை உருவாகி யுள்ளது. ஒடிசாவில் ஆளும் கட்சி பாஜக கூட்டணியை வேண் டாம் என்று கூறிவிட்டது. பஞ்சாப்பிலும் அகா லிதளம் கூட்ட ணிக்கு வர மறுத்து விட்டது.
அதேநேரத்தில், வடகிழக்கு மாநிலங்களில் முற்றிலும் பாஜக புறக்கணிக்கப்பட்டுள்ளதால், 3 மாநிலங்களில் போட்டி போட முடியாத நிலை உருவாகியுள் ளது.
தென் மாநிலங்களில் தமிழ் நாடு, கேரளா, கருநாடகா, தெலங் கானா, ஆந்திரா, புதுவை ஆகிய மாநிலங்களில் உள்ள 134 தொகு திகளில் 10 சீட் கூட வாங்க முடியாத நிலை தற்போது உருவாகியிருப்பதாக ஒன்றிய உளவுத் துறை கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
மகராட்டிரா, பீகார் போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சி களையே உடைத்துள்ளதால், அக் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி இந்தியா கூட்டணியில் இணைந்து விட் டது.
அங்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடந்த முறை பெற்ற சீட்டுகளை விட பாதிதான் வாங்கும் நிலை உரு வாகியுள்ளது. பாஜக பெரிதும் நம்பும் உத்தரப் பிரதேசம், மத்தி யப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலேயே பெரும் சரிவை சந்திக்கும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் 200 முதல் 220 சீட்டுகள்தான் அதிக பட்சமாக கிடைக்கும் என்று ஒன்றிய உளவுத்துறை கணிப்பில் தெரியவந்துள்ளது.
தென் மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதால் அதில் ஒரு 5 சீட்டுகளாவது பெற பாஜக தீவிரம் காட்டத் தொடங்கி யுள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி மோடி, அமித்ஷா, ஒன்றிய அமைச்சர்கள் வரத் தொடங்கியுள் ளனர். அதன் ஒரு கட்டமாக வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி மோடி சென்னை வருகிறார்.
சென்னையில் பனகல் பார்க் கில் இருந்து 3 மணிக்கு வாகனப் பேரணியை மோடி நடத்து கிறார். அங்கிருந்து தேனாம் பேட்டை சிக்னல் வரை அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அதன் பின்னர் ஏப்ரல் 12ஆம் தேதி மீண்டும் தமிழ் நாடு வருகிறார்.
கோவை, தருமபுரியில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதே போல அமித்ஷாவும் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி ராம நாதபுரம், மதுரை(தேனி தொகுதி), சென்னை யில் பிரசாரம் செய் கிறார்.
இவ்வாறு அடிக்கடி அவர் கள் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டில் முற் றிலும் கள நிலவரம் பாஜவுக்கு கலவரமாகத்தான் உள்ளது. ஒரு சீட் கூட பாஜவுக்கு கிடைக்காது என்று தற்போது தெரியவந்துள் ளது.
ஆனாலும் எப்படியாவது 5 சீட்டாவது பெற வேண்டும் என்று நினைத்து தமிழ்நாட் டிற்கு அடிக்கடி வரத் தொடங் கியுள்ளனர். வட மாநிலங்களே தற்போது பாஜவை கைவிட்டுள்ள நிலை யில் தென் மாநிலங்களில் மட்டும் எப்படி பாஜவுக்கு சீட் கிடைக் கும் என்கின்றனர் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
No comments:
Post a Comment