மக்களவைத் தேர்தலில் உங்கள் கூட்டணியின் முக்கிய எதிரி அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க.வா? - இரா.முத்தரசன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 3, 2024

மக்களவைத் தேர்தலில் உங்கள் கூட்டணியின் முக்கிய எதிரி அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க.வா? - இரா.முத்தரசன்

featured image

மக்களவைத் தேர்தலில் உங்கள் கூட்டணியின் முக்கிய எதிரி
அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க.வா?
கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்

சென்னை, ஏப்.3 –  தி.மு.க கூட் டணி கட்சிகளுக்கு ஆதரவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை, தியாகராயர் நக ரில் உள்ள கட்சி தலைமை அலு வலகத்தில் அவர் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த சிறப்பு நேர்காணல் வருமாறு,

கேள்வி: தேர்தல் பிரச்சாரத் தில் மக்களை சந்தித்து வருகி றீர்கள். தேர்தல் களம் எப்படி உள்ளது?
இரா.முத்தரசன்: மக்கள் மோடி ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். சமை யல் எரிவாயு உருளை விலை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எல்லாம் ஏமாற்று நாடகம் என மக்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி நிவாரணம் தருமாறு பிரதமரி டம் முதலமைச்சர் கேட்டார். ஆனால், ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை, தொழில், விவசாயம், வணிகம் என அனைத் தும் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களிடம் கடுமையான அதி ருப்தி நிலவுகிறது.
கேள்வி: பாஜகவை, அதிமுக விமர்சனம் செய்வது இல்லை. திமுகவுக்கு எதிராக மட்டுமே பிரச்சாரம் செய்கிறது என்று உங்கள் கூட்டணித் தலைவர் கள் பேசுகிறார்கள். ஆனால், நீங்கள் அதிமுகவை விடவும் பாஜகவைத்தானே அதிகமாக விமர்சனம் செய்கிறீர்கள். ஏன்?

இரா.முத்தரசன்: கடந்த 10 ஆண்டுகளில் தற்போதைய தேர் தலுக்கு முன்பு வரை பாஜகவை அதிமுக ஆதரித்துதான் வந்தது. இப்போது தேர்தல் நேரத்தில் நாங்கள் உறவை முறித்துக் கொண்டுள்ளதாக சொல்கி றார்கள். இன்றைக்கும் பாஜகவு டன், அதிமுக கள்ளத்தனமான உறவை வைத்துக் கொண்டுள் ளது.

கேள்வி: தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் உங்கள் கூட்டணியின் பிரதான அரசியல் எதிரி அதிமுகவா அல்லது பாஜகவா?
இரா.முத்தரசன்: நாடு தழு விய அளவில் எங்களுக்கு எதிரி பாஜக. பாஜகவின் ‘பி டீம்’ ஆக அதிமுக உள்ளது. எனவே, இரு கட்சிகளையும் நாங்கள் எதிர்க் கிறோம். எனினும், கொள்கை ரீதியாக எங்களது பிரதான எதிரி பாஜகதான்.

கேள்வி: உங்கள் கூட்டணி யின் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு தரும் முக்கியத்துவத்தை பார்த் தால், தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருவது போல தெரிகிறதே?
இரா.முத்தரசன்: கொள்கைரீதியாக பாஜகவை அதிகள வில் விமர்சனம் செய்வதால் அக்கட்சி வளர்ந்து விட்டதாக அர்த்தம் இல்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 2ஆம் இடத் துக்குக் கூட பாஜகவால் வர முடியாது. பல்வேறு தொகுதிக ளில் அவர்கள் டெபாசிட் தொகையை கூட திரும்பப் பெற முடியாது.

கேள்வி: திமுக கூட்டணி யில் 2 இடங்களைப் பெற்றிருக் கிறீர்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு 2, 3 சீட்களை நம்பியே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கப் போகிறது? இதனால், கட்சியின் வளர்ச்சி பாதிக் காதா?
இரா.முத்தரசன்: எங்கள் கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளுக்கும் சீட்களை பகிர்ந்தளிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது. நாங்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்டவை தலா 3 இடங்களை கேட்டோம். ஆனால், அப்படி கொடுப்பதில் நடைமுறையில் வாய்ப்பு கிடை யாது. இதனால் கட்சி வளர்ச்சி பாதிக்காது.

கேள்வி: தமிழ்நாட்டில் திமுக அரசின் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராட் டிக் கொண்டே இருக்கின்றதே. இந்த அரசின் செயல்பாடுகளில் உங்களுக்கு விமர்சனமே இல்லையா?
இரா.முத்தரசன்: விமர்சிக்க வேண்டிய விடயங்களில் விமர் சனம் செய்ததோடு, களத்தில் இறங்கி போராடியும் உள் ளோம். குறிப்பாக, தொழிலா ளர்களுக்கான வேலை நேரம் 8 மணியில் இருந்த 12 மணி நேரமாக உயர்த்தப்பட்ட போது கடுமையாக விமர்சனம் செய்ததோடு, போராட்டம் நடத்தினோம். உடனடியாக, முதலமைச்சர் அதை திரும்ப பெற்றார். திமுக ஒழிக என நீங்கள் ஏன் போராட்டம் நடத்த வில்லை எனசிலர் எதிர்பார்க் கின்றனர், அதை நாங்கள் செய்ய முடியாது.

கேள்வி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் இருப்பது போல் தெரிகிறதே?
இரா.முத்தரசன்: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூ தியம் செயல்படுத்த வேண்டும் என்ற பிரச்சினை உள்ளது. அதேபோல், போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் பிரச் சினை உள்ளது. இவர்களை முதலமைச்சர் நேரில் அழைத்து பேசி நிதி நிலைமை சீரடைந்த பிறகு சரி செய்யப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

கேள்வி: அதிமுக உருவான காலத்தில் இருந்து அக்கட்சியு டன் நீண்ட காலம் இணைக்க மாக செயல்பட்டது உங்கள் கட்சி. அண்மைக் காலத்தில் அக்கட்சியின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? அக்கட்சிக்கான எதிர்காலம் எப்படி இருக்கும்?
இரா.முத்தரசன்: பழனிசா மியால் கட்சியை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதே நிலை நீடித்தால் அதிமுக பலவீனப் படுவதைத் தவிர வேறு வழியில்லை.

கேள்வி: மிக விரைவிலேயே திமுக, பாஜக என்பதாகத்தான் தமிழ்நாடு அரசியல் களம் இருக்கும் என்றும், அதிமுக 3ஆம் இடத்துக்கு தள்ளப்படும் என்றும் கூறப்படுவது பற்றி…
இரா.முத்தரசன்: ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு பாஜக எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பது தெரிந்து விடும்.

கேள்வி: கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அகில இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிக ளுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
இரா.முத்தரசன்: அகில இந்திய அளவில் பல மாநிலங் களில் இந்தியா கூட்டணியுடன் உடன்பாடு எட்டப்பட்டுள் ளது. போன தேர்தலில் இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 என மொத்தம் 5 இடங்களைத் தான் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றது. இந்த முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment