மதுபான கொள்கை வழக்கு
குற்றவாளியிடமிருந்து பணம் பெற்ற பிஜேபி தலைவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?
டில்லி பெண் அமைச்சர் கேள்வி
புதுடில்லி,ஏப்.9 – பி.ஜே.பி. தலைவர்கள் மட்டும் நடவடிக் கைக்கு அப்பாற்பட்டவர்களா? என்று டில்லி பெண் அமைச்சர் அதிசி கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஊழல் நடந்ததாகக் கூறப்படும் மதுபான கொள்கை வழக்கில் பணம் பெறப்பட்டதா என அமலாக்கத் துறை இன்னும் விசாரணை நடத்திக் கொண் டிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு இதில் ஏதாவது தொடர்பு இருக்காதா என்று சோதனை நடத்தி வருகிறது. என்றாலும் இது வரை அவர்களின் வீட்டுகளில் இருந்து ஒரு ரூபாய் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆம் ஆத்மி கட்சி பணம் பெற்றதற்கான ஆதாரம் எங்கே என்று அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கேட்டு வருகிறது. ஆனால். அமலாக்கத் துறை அதற்கு இன்னும் பதில் கூறவில்லை. பணம் பெறப்பட்டது இன்னும் நிரூபிக்கப்படவில்லை, அது இன்னும் விவாதமாகவே உள்ளது. என்றாலும் வழக்கு தொடர்பாக பல ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை, சிபிஅய், வருமான வரித் துறை, இந்திய தேர்தல் ஆணையம் போன்ற ஒன்றிய அமைப்புகள் மூலமாக ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பல பொய் வழக்குகளை பாஜக பதிவு செய்துள்ளது. பாஜக கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தாக்கீது அனுப்பிய கோவா வழக்கும் இதுபோல ஒன்றுதான். ஆனால் 5.4.2024 அன்று இந்த வழக்கில் அடிப்படை இல்லை எனக் கூறி கோவா நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய் துள்ளது. நான் பாஜகவுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன். அரசியல் ரீதியாக நீங்கள் ஆம் ஆத்மி கட்சியை எதிர்கொள்ள விரும்பினால் புலனாய்வு அமைப்புகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு தேர்தலைச் சந்திக்கக் கூடாது. உங்களுக்கு தைரியம் இருந்தால் நீங்கள் செய்த பணிகளின் அடிப்படையில் தேர்தல் களத்தைச் சந்திக்க முன்வாருங்கள்” என்று தெரிவித்தார்.
இலங்கையை திவாலாக்கியது ராஜபக்ச குடும்பமே: சந்திரிகா பகிரங்க குற்றச்சாட்டு
கொழும்பு,ஏப்.9- ராஜபக்ச குடும்பத்தினரால் இலங்கை திவாலான நாடாக மாற்றப்பட்டதாக மேனாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். மக்களிடமிருந்து திருடாமல் நாடு திவாலாகியிருக்காது என்றும் அவர் கூறு கிறார். ராஜபக்ச குடும்பம் நாட்டை திவாலாக்கியது என்று நாட்டின் உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளதாக அவர் குறிப் பிட்டார். அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப் பெற்று ஒருமுறை தோற்கடிக்கப்பட்டு பின்னர் அறுபத்தொன்பது இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை சீரழித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள் ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment