டி-சர்ட்டுகள் பரிசுப் பொருள்கள்கூட குஜராத் மாநிலத்தில் அடித்துதான் தமிழ்நாட்டிற்கு வரவேண்டுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

டி-சர்ட்டுகள் பரிசுப் பொருள்கள்கூட குஜராத் மாநிலத்தில் அடித்துதான் தமிழ்நாட்டிற்கு வரவேண்டுமா?

சென்னை, ஏப். 6- பாஜவின ரின் போலி தமிழ் பாசத் தைப் புரிந்துகொள்ளுங் கள். தேர்தலுக்கு முன்னர் டிசம்பர் மாதம் பல கோடி பாரதிய ஜனதா ஆதரவு டிசர்ட்டுகள், இதர பரிசுப்பொருட்கள் சூரத், வடோதரா, ஆனந்த போன்ற ஊர்களிலிருந்து அச்சடித்து கண்டய்னர் கண்டய்னராக கொண்டு வந்து பல மாவட்டங்க ளில் பதுக்கி வைத்துள்ள னர்.
திருப்பூர் விருதுநகர் பகுதிகளில் பிடிபட்ட பாஜக மற்றும் மோடி சின்னம் பொறிக்கப்பட்ட தமிழில் சுலோகங்கள் எழுதப்பட்ட டி சர்ட்டு கள், தொப்பிகள், விசிறி கள், பாத்திரங்கள் மற் றும் அன்றாட உபயோ கப்பொருட்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட் டவைகள் இருந்தன.

சரி, தேர்தலுக்கு தேர் தல் விளம்பரத்திற்காக கொடுக்கப்படுவதுதான், ஆனால் இவை எல்லாம் தமிழ் நாட்டில் தான் மிகவும் குறைந்த விலை யில் அச்சிடப்பட்டு இந் தியா முழுவதும் கட்சிகள் கொண்டு செல்கின்றன.
எடுத்துக்காட்டாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது கட்சியின் சின்னம் மற்றும் பதாகை களை திருப்பூரில் இருந் தும், சமாஜ்வாதி கட்சி சிவகாசியில் இருந்தும் அச்சடித்துக் கொண்டு செல்கிறது.
ஆனால் பாஜகவினர் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பொருட்களைக் கூட குஜராத்தில் அச்சடித்து கொண்டு வருகிறார்கள் என்றால் இவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு எது வுமே செய்யக்கூடாது என்ற வன்மம் மட்டுமே இவர்களிடம் நிறைந்துள் ளது என்பதற்கு இதை விட சிறந்த எடுத்துக் காட்டு வேறு என்ன வேண்டும்.

No comments:

Post a Comment