பிரதமர் பேச்சு நாகரிகமற்றது : வைகோ சாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

பிரதமர் பேச்சு நாகரிகமற்றது : வைகோ சாடல்

featured image

சென்னை, ஏப். 5 – பிரதமர் மோடி நாகரிகமின்றி பேசுகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடினார்.

தென்சென்னை மக்களவைத்தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து 3.4.2024 அன்று ஜாபர்கான் பேட்டையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைகோ பேசுகையில், பிரத மருக்கு ஆணவம், அகம்பாவம் தலைக் கேறி உள்ளது. திராவிட இயக்கத்தை அழிப்பேன் என்கிறார். நாகரிகமின்றி பேசுகிறார். அரசியலில் அவர் தொடர, நாகரிகமாக பேசுவது குறித்து மு.க.ஸ்டாலினிடம் ரகசியமாக பிரதமர் பயிற்சி பெற வேண்டும் என்றார்.

தமிழ்நாடு அரசு செயலபடுத்திய காலை உணவு திட்டத்தை உலகமே வியந்து பார்க்கிறது. இந்த திட்டத்தை கனடா நாடும் அறிமுகப்படுத்தி உள்ளது. அத்தகைய சிறப்பான ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கி றது. திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசு கிறது. மகாபாரதத்தில் துரி யோதனன் கூட்டம் அழிந்தது. அதேபோன்ற நிலை இந் துத்துவா சக்திக ளுக்கும் இந்த தேர்தலில் ஏற்படும் என்றும் அவர் கூறினார். பிரதமருக்கு இது கடைசி தேர்தல். இனி அவர் பிரதமராக நாடாளுமன்றம் செல்ல முடியாது. 40 தொகுதிகளிலும் இந்திய அணி வெல்லும். இந்தியா கூட் டணி சார்பில் பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுவார். அதை நாடே காணப் போகிறது.

இந்த தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி, எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வம் காணாமல் போ வார்கள் என்றும் வைகோ கூறினார்.

இந்தக் கூட்டத்தில், திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், மதி முக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, துணை மேயர் மு.மகேஷ்குமார், திரா விடர் கழக பிரச்சார செயலாளர் அருள் மொழி, சிபிஎம் தென்சென்னை மாவட் டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் மற்றும் முத்தழகன் (காங்கிரஸ்), எஸ்.கே.சிவா (சிபிஅய்), கழககுமார், சுப்பிரமணி, ஜீவன் (மதிமுக), திமுக பகுதிச் செயலா ளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ் (திமுக), ஜி.வெங்கடேஷ் (சிபிஎம்) உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் பேசினர்.

No comments:

Post a Comment