சென்னை, ஏப். 5 – 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வு பெற்றார். 1991 முதல் 2019ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத் தில் இருந்தும் மாநிலங்களவைக்கு தேர்வான மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் (3.4.2024) முடிவடைந்தது. இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
“அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங், 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நாட்டுக்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, அறிவாற்றல் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய கலவையான செயல்பாடுகள் மூலமாக கட்சிகள் கடந்து மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். சவாலான காலங்களில் நான் உட்பட பலருக்கும் உங்களது தலை மைத்துவம் உத்வேகமாக அமைந்துள்ளது.
இந்திய ஒன்றியத்துக்கும், மக்களுக்கும் மகத்தான பங்களிப்பு செய்த பெருமிதத்துடன் உங்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எதிர்க்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண் டும் என திமுக சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும் வாழ்த்துகிறேன்.
உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அனல் மின் நிலையங்களில்
மின் உற்பத்தி திறன் அதிகரிப்பு
சென்னை, ஏப். 5- தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ.10,158 கோடி செலவில் 800 மெகாவாட் திறனில் வடசென்னை-3 அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது, மற்ற மின்நிலையங்களை விட அதிக திறன் உடையது. இங்கு கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின்வாரிய அனல் மின் நிலையங்களின் ஒட்டுமொத்த மின்னுற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது மின்வாரி யத்துக்கு தூத்துக்குடியில் 1,050 மெகாவாட் திறனும், சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் திறனும், மேட்டூர் விரிவாக்கத்தில் 600 மெகாவாட் திறனும், வடசென்னையில் 630 மெகாவாட் திறனும், வடசென்னை விரிவாக்கத்தில் 1,200 மெகாவாட் திறனும் கொண்ட அனல் மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன.
இந்நிலையில், வடசென்னை-3 அனல்மின் நிலையத் தில் 800 மெகாவாட் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்வாரியத்துக்குச் சொந்தமான அனல் மின்னுற்பத்தி நிலையங்களில் மின்னுற்பத்தித் திறன் 5,120 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இக் கோடைக் காலத்தில் ஏற்படும் மின்தேவையை மின்வாரி யம் எளிதாக பூர்த்தி செய்யும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.
No comments:
Post a Comment