புதுடில்லி, ஏப்.5- ஒன்றிய புல னாய்வுத்துறை அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது அவர்கள் சேரும் கட்சியின் அடிப்படையில் செயல் படுகிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித்பவார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை கூற லாம்.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் பம்பாய் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், மும்பை பொருளாதார குற்றப்பிரிவு அஜித்பவார் மற்றும் 70 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் பதிவு செய்தது. மகாராட்டிர மாநில கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த காலகட்டத்தில் அஜித் பவார் அந்த வங்கியின் இயக்கு நராக இருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கப்பிரிவு இயக்குநரகமும் அவர் மீது செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் மேலும் பலர் இடம் பெற்றிருந்தனர்.
நவம்பர் மாதம் மும்பை பொருளாதார குற்றப்பிரிவும், அமலாக்கப்பிரிவும் தொடர்ந்து தங்கள் விசாரணையை நடத்தி வந்தது. 2020 அக்டோபரில் அஜித் பவார் மகாராட்டிர மாநில அரசின் அங்கமாக மாறியதன் காரணமாக பொருளாதார குற்றப் பிரிவு இந்த வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால் அமலாக்கப்பிரிவு இந்த முடித்து வைக்கப்பட்ட அறிக்கையை எதிர்த்து நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. 2022 ஏப்ரல் மாதம் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைக்கு இணை யான புகார் ஒன்றை பதிவு செய்தது. ஒரு மாதம் கழித்து ஏக்நாத் ஜிண்டே மற்றும் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசேனா அணி யில் இருந்து வெளியேறி பா.ஜ.க. வின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைத்தது. 3 மாதத்திற்குப் பிறகு மும்பை பொருளாதார குற்றப் பிரிவு அஜித்பவாருக்கு எதிரான வழக்கை மீண்டும் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றது.
இந்த நேரத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது. அதாவது 2023 ஜூலை மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட் டணியில் 7 பிற கட்சி தலைவர் களோடு அவர் சேர்ந்தார். உடன டியாக அவர் மகாராட்டிர மாநில துணை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
2023 செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை 2 துணை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. அதில் அஜித்பவார் பெயரை மட்டும் சேர்க்காமல் மற்றவர்களை குறிப்பிட்டது.
இதைத் தொடர்ந்து 2024 ஜனவரி மாதம் மும்பை பொரு ளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தை அணுகி இந்த வழக்கில் போதிய சாட்சியம் ஏதும் இல்லை என்று தெரிவித்தது. அத்துடன் 2-ஆவது முடித்து வைக்கும் அறிக்கையை தாக்கல் செய்தது.
ஆக பா.ஜ.க. அணியில் சேர்ந்த வுடன் அஜித்பவார் மீதான வழக் குகள் இல்லாமல் போய்விட்டது.
No comments:
Post a Comment