கடுமையான 'உபா' போன்ற சட்டங்கள் நீக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

கடுமையான 'உபா' போன்ற சட்டங்கள் நீக்கப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை

புதுடில்லி,ஏப்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி புதுடில்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (4.4.2024) நடைபெற்றது. தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர்களான பிரகாஷ் காரத், பிருந்தா காரத் மற்றும் நிலோத்பால் பாசு ஆகியோர் முன்னிலையில் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட்டார்.
அதில், பாஜகவை தோற்கடிக் கவும், இடதுசாரிகளை வலுப் படுத்தவும், மத்தியில் மாற்று அரசியலாக மதச்சார்பற்ற அரசு அமைப்பதை உறுதி செய்யவும் வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், அரசியலில் இருந்து மதம் பிரிக்கப்பட்டது என்ற கொள்கையை சமரசமின்றி கடைப்பிடிக்க போராடுவதாக அக்கட்சி உறுதியளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துக்கு வந்தால், யுஏபிஏ, பிஎம்எல்ஏ, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) போன்ற கொடூர சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். வெறுப்பு பேச்சு மற்றும் குற்றங்களுக்கு எதி ரான சட்டத்துக்காக போராடு வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரும் செல் வந்தர்களுக்கு வரி, பொது செல்வ வரி, பரம்பரை வரி ஆகியவற்றுக்கு ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்படும். நூறு நாள் வேலை திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு இரண்டு மடங்காக உயர்த்தப்படும். நகர்ப் புற வேலைவாய்ப்பை உறுதிப் படுத்தும் புதிய சட்டம் இயற்றப் படும் எனவும் அக்கட்சி தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளது.

No comments:

Post a Comment