தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை உயர்வு
சென்னை,ஏப். 3- கடந்த ஜனவரி 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டு இருந்தது. அதன் படி, தமிழ்நாட்டில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அதன் பின்னரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற் கும், நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றையெல்லாம் சரிபார்த்து பட்டியலில் புதிய வாக் காளர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
கடந்த வாரத்தில், தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 ஆக இருந்தது. அதில், ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367; பெண்கள் 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69; மூன்றாம் பாலினத்தவர் 8,465 என இருந்தது. தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் கள் சேர்க்கப்பட்டனர்.
தற்போது இந்த வாக்காளர் பட்டியல் 28.3.2024 அன்று இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் வாக் காளர்கள் எண் ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது.
தற்போது இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழ் நாட்டில் உள்ள மொத்த வாக்கா ளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 ஆகும். அதில், ஆண்கள் 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793; பெண் கள் 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665; மூன்றாம் பாலி னத்தவர் 8,467 ஆகும்.
இதில் திருவள்ளூர் நாடாளு மன்ற தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 10 லட்சத்து 24 ஆயிரத்து 149; பெண்கள் 10 லட்சத்து 61 ஆயிரத்து 457; மூன்றாம் பாலினத்தவர் 385 ஆகும். வடசென்னை தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224; ஆண்கள் 7 லட் சத்து 30 ஆயிரத்து 395; பெண்கள் 7 லட்சத்து 65 ஆயிரத்து 286; மூன்றாம் பாலினத்தவர் 543.
தென்சென்னை தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133; ஆண்கள் 10 லட்சத்து 851; பெண்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 818; மூன்றாம் பாலினத்தவர் 464. மத்திய சென்னை தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161; ஆண்கள் 6 லட்சத்து 67 ஆயி ரத்து 465; பெண்கள் 6 லட்சத்து 82 ஆயிரத்து 241; மூன்றாம் பாலி னத்தவர் 455.
சிறீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119; ஆண்கள் 11 லட்சத்து 80 ஆயிரத்து 263; பெண்கள் 12 லட் சத்து 1 ஆயிரத்து 427; மூன்றாம் பாலினத்தவர் 429.
காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866; ஆண்கள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 456; பெண்கள் 8 லட் சத்து 95 ஆயிரத்து 107; மூன்றாம் பாலினத் தவர் 303.
இந்த வாக்காளர் பட்டியலின் படி சிறீபெரும்புதூர் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. குறைந்த பட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 120 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
பா.ஜ.க. வாசிங் மெஷின்: காங்கிரஸ் கிண்டல்
புதுடில்லி,ஏப்.3- “தாவூத் இப்ராகி மையும் சுத்தம் செய்யும் வாசிங்மெசின் பாஜகவிடம் உள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா விமர்சித்துள்ளார்.
புதுடில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, “பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக வெளியான அனைத்து சிஏஜி அறிக்கைகளும் போலியானவை. நமது ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை குழி தோண்டிப் புதைக்கும் கட்சி யாக மாறிய ஒன்றிய அரசு ஏஜென்சிகளின் ஒவ்வொரு அதிகாரியையும் நாங்கள் பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.
யாரும் தப்பிக்க மாட்டார்கள். இந்தியாவின் மேனாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய், பாஜக அரசின் கைகளில் வெறும் பொம்மை மட்டுமே” என்று கடுமையாக சாடினார்.
முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பில், ‘பாஜக வாசிங் மெசின்’ என்ற எழுதப்பட்டிருந்த இயந்திரத்தை அறிமுகப் படுத்தினார். இந்த வாசிங் மெசினில், ‘ஊழல்’, ‘பாலியல் வன்கொடுமை செய்வோர்’, ‘மோசடி பேர்வழி’ போன்ற வார்த் தைகள் எழுதப்பட்ட கறை படிந்த துணி உள்ளே போடப் பட்டது.
சிறிது நேரத்தில் வாசிங் மெசினில் இருந்து துணியை எடுத்தபோது ‘பாஜக மோடி வாஷ்’ என்று எழுதப்பட்டிருந்த கரையே இல்லாத துணியாக அது இருந்தது.
இதன்பின் பேசிய பவன் கெரா, “புதியதாக ஒரு வாசிங் பவுடர் கிடைத் துள்ளது. அது எல்லா கறையையும் நீக்கிவிடும். அதற்குப் பெயர் ‘மோடி வாசிங் பவுடர்’. இதை பயன்படுத்தும் ‘பாஜக வாசிங் மெசின்’ விலை 8,552 கோடி ரூபாய். இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகை.
இந்த இயந்திரம் 10 வயது பழை மையான கறைகளைகூட அகற்றும். மேலும் இதில், பல்வேறு அம்சங்கள் உள்ளன. கறைகளை அகற்றும் அம்சம் பாஜக சேர்பவர்களை முழுவது மாக சுத்தம் செய்யும். ‘ஸ்பின்’ அம்சம் ஊழல் என்று கூறப்படும் நபரைக் கூட தேச பக்தராக்கும். ‘ஸ்லோ’ அம்சம் பாஜகவில் சேர்ந்த தலைவர்களுக்கு எதிரான விசாரணை களை நத்தை வேகத்தில் கொண்டு வரும்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாஜகவில் இணைந்தால் அடுத்த நொடியே அவர் குற்றமற்றவர் ஆகிவி டுவார். தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாசிங் மெசின் பாஜகவிடம் உள்ளது. அவரை பாஜக வாசிங் மெசி னின் உள்ளே வைத்தால், வெளியே வரும்போது மாநிலங் களவை உறுப்பினராகக் கூட வரலாம்” என்று கிண்டலாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment