கல்யாணங்களில் கன்னிகாதானம் செய்வது கட்டாயம் இல்லை அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 9, 2024

கல்யாணங்களில் கன்னிகாதானம் செய்வது கட்டாயம் இல்லை அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

லக்னோ,ஏப்.9- உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசுதோஷ் யாதவ், திருமண மானவர். குடும்பத் தகராறு காரணமாக, இவரது மனைவி வீட்டார் இவர் மீது கிரி மினல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு லக்னோவில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. அப் போது அசுதோஷ் யாதவுக்கு எதிராக கடந்த மார்ச் 6-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அசுதோஷ் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி அமர்வு முன்பு நடைபெற்றது. வழக்கு விசா ரணையின் போது, ‘‘இந்து திருமண சட்டத்தின்படி, திரு மணத்தின் போது மகளை அவரது தந்தை கைப்பிடித்து மணமகனிடம் ஒப்படைக்கும் நிகழ்வை கட்டாயம் செய்ய வேண் டும். ஆனால், என் விஷயத்தில் அப்படி கன்னிகா தான நிகழ்வு நடைபெறவில்லை’’ என்று வாதிட் டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்து திருமண சட்டத் தின்படி கன்னிகாதான சடங்கு ஒன்றும் அவசியமானது இல்லை. திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் இணைந்து செய்யும் சப்தபதி சடங்குதான் முக்கியம். (மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டிய பிறகு இருவரும் அக்னியை 7 முறை வலம் வந்து 7 உறுதிமொழிகளை எடுக்கும் சடங்குதான் சப்தபதி). ஒட்டு மொத்த சூழ்நிலைகளையும் பரிசீலித்த பிறகு கன்னி காதான சடங்கு அவசியம் இல்லாதது என்று அறிய முடிகிறது. இந்த வழக்கில் இறுதி முடிவெடுப்ப தற்கு கன்னியாதான சடங்கு நடந்ததா, இல்லையா என்பது விஷயமல்ல. எனவே, இதை நிரூபிக்க சட்டப்பிரிவு 311 சிஆர் பிசி சட்டத்தின்படி சாட்சிக்கு அழைப்பாணை அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை.
-இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

No comments:

Post a Comment