பி.ஜே.பி. என்றால் கார்ப்பரேட் நண்பன்
தேர்தல் நன்கொடையாக பிஜேபிக்கு ரூ.6,572 கோடி குவிந்தது
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிக்கை
சென்னை, ஏப்.5- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந் தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதர வாக பா.ஜனதா அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரத மர் மோடி கூறியிருக்கிறார். 40 சதவிகிதமாக இருந்த கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்பட்ட தால் ரூ.5 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக இருந்த ஒன்றிய அர சின் வருமானம் ஓராண்டில் ரூ 4 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது.
அதேபோல பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் நிறுவனம் 2023-இல் வெளியிட்ட அறிக்கையின் படி மக்கள் தொகையில் 10 சதவீத பெரும் பணக்காரர்கள் இந்தியாவின் சொத்து மதிப்பில் 77சதவீதத்தை குவித்து வைத்துள்ளனர். அதேநேரத் தில் 50 சதவீத மக்கள் அதாவது 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பு ஒரு சதவீதம் தான் உயர்ந்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் மோடி யின் நெருங்கிய நண்பரான அதா னியின் சொத்து 2,229 சதவீதமும், அம்பானியின் சொத்து 400 சத வீதமும் அதிகரித்திருக்கிறது. மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பய னடைந்தார்கள். அதனால் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூ.6 ஆயிரத்து 572 கோடி குவித்த பிரதமர் மோடிக்கு ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்று வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட் டிருக்கிறது. -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment