புதுடில்லி, ஏப்.9 “ஓயாமல் உழைப்பதாக கூறும் பிரதமர் மோடி ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நீண்ட விடுமுறையில் செல்வார். இது மக்களின் உத்தரவாதம்” என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. பீகாரின் நவடா மாவட் டத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, “எனக்கு கேளிக்கைகள், ஓய்வு கிடையாது. நான் மக்களுக்கு உழைப்பதற்காகவே பிறந்தவன்” என்று பேசியிருந்தார். மோடியின் இந்த பேச் சுக்கு காங்கிரஸ் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “காங்கிரசின் 5 நீதிகள், 25 உத்தரவாதங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை 10 ஆண்டுகால அநீதி ஆட்சிக்கு பிறகு இந்திய மக்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது காலத்தின் தேவை. இது நாட்டில் துன்பப்படும் மக்களின் குரல்.
இந்த நம்பிக்கை உத்தரவாதங்களால் பயந்து போயுள்ள மோடி, தன் நாற்காலியை காப் பாற்றிக் கொள்ள ஆதாரமற்ற விடயங்களை பற்றி பேசுகிறார். மோடியின் தொடர் பொய் களால் மக்கள் சோர்வடைந்து உள்ளனர். ஓய்வின்றி உழைப்பதாக கூறும் மோடி ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நீண்ட ஓய்வில் சென்று விடுவார். இது இந்திய மக்களின் உத்தரவாதம்” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment