புதுடில்லி, ஏப்.3- நாடாளுமன்ற தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையில் மோடி அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா? என எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த தீவு விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் பிரதமர்கள் அலட்சியமாக இருந் ததாகவும், இந்திய மீனவர்களின் நலன் களை விட்டுக்கொடுத்ததாகவும் வெளி யுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டினார்.
ஆனால், கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய பதில் ஒன்றை தற்போது எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி ஒன்றிய அரசை கேள்வி எழுப்பியுள்ளன.
அதில், ‘இந்த விவகாரத்தில் கேள்விக் குரிய பகுதி (கச்சத்தீவு) ஒருபோதும் வரையறுக்கப்படாததால், இந்தியாவுக் குச் சொந்தமான நிலப்பரப்பை கைய கப்படுத்துவதோ அல்லது விட்டுக் கொடுப் பதோ இதில் இல்லை. ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு இந்தியா – இலங்கை பன் னாட்டு கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அப்போது வெளியுறவுத் துறை செயலாளராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ப.சிதம்பரம் கேள்வி
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும். மேனாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது-
கச்சத்தீவு தொடர்பாக கடந்த 27.1.2015இல் வெளியுறவு அமைச்சகம் வழங்கிய பதிலை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தயவு செய்து பார்க்க வேண் டும். அதில் கச்சத்தீவை, இலங்கைக்கு சொந்தமான ஒரு சிறிய தீவு என்பதை இந்தியா ஒப்புக் கொண்ட சூழ்நிலையை நியாயப்படுத்தி இருந்தது.
இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சரும், அவரது அமைச்சகமும் பல்டி அடித்திருப்பது ஏன்? மக்கள் எப்படி வேகமாக தங்கள் நிறத்தை மாற்றுகிறார்கள்?
50 ஆண்டுகளாக மீனவர்கள் கைது
கடந்த 50 ஆண்டுகளாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது உண் மைதான். அதைப்போல இந்தியாவும் இலங்கை மீனவர்களை கைது செய்கி றது. ஒவ்வொரு அரசும் இலங்கையுடன் பேசி இந்திய மீனவர்களை விடுவித்து வருகிறது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பா.ஜனதா ஆட்சியில் இருந்த போதும். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?
2014ஆம் ஆண்டு முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில் லையா?
-இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
முரண்பாடுகள்
இதைப்போல 2015ஆம் ஆண்டு ஒன்றிய அரசு வெளியிட்ட பதிலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து சிவ சேனா (உத்தவ்) தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறியிருப்பதாவது,
கச்சத்தீவு தொடர்பாக 2024இல் வெளியிடப்பட்டிருக்கும் தகவலுக்கும். 2015-இல் வெளியிடப்பட்டிருக்கும் தக வலுக்கும் இடையே உள்ள முரண் பாடுகளை வெளியுறவுத்துறைதான் நிவர்த்தி செய்யவேண்டும்.
தற்போதைய வெளியுறவு அமைச்சர் 2015ஆம் ஆண்டு வெளியுறவு செயலாள ராக இருந்தபோது வெளியிடப்பட்ட பதிவில் கேள்விக்குரிய பகுதி (கச்சத்தீவு) ஒருபோதும் வரையறுக்கப்படாததால், இந்தியாவுக்குச் சொந்தமான நிலப் பரப்பை கையகப்படுத்துவதோ அல் லது விட்டுக்கொடுப்பதோ இதில் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக வழக்கா?
ஆனால், 1.4.2024 அன்று வெளியுறவு அமைச்சரும், 31.3.2024 அன்று பிரதம ரும் கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்ட தாக கூறியிருக்கின்றனர்.
அப்படியென்றால் நாடாளுமன்ற தேர்தலுக்காக அவர்களின் நிலைப்பாடு மாற்றமா அல்லது இலங்கைக்கு எதி ராக மோடிஜி வழக்கு தொடர்ந்தாரா?
-இவ்வாறு பிரியங்கா சதுர்வேதி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதைப்போல காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியுறவுத்துறை செய லாளர், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றதும் எவ்வளவு வேகமாக தனது நிறத்தை மாற்றிக் கொண்டார் என்பதை இது காட்டுகிறது. மோடி அரசை பொறுத்த வரை கபட நாடகத் துக்கோ, பொய் பேசுவதற்கோ எல்லையே இல்லை என சாடியுள்ளார்.
No comments:
Post a Comment