ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்று வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்று வரை தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட தடை

featured image

சென்னை,ஏப்.5- வருகிற 19ஆம் தேதி காலை 7 மணியிலிருந்து ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு மக்களவைப் பொதுத் தேர்தல்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வாக் குப் பதிவிற்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப் புகளின் முடிவுகளை வெளியிடுதலுக்கும் பரப்பு தலுக்கும் பின் வரும் வரையறைகள் பொருந்தும் என இந்திய தேர்தல் ஆணையம் அறி வுறுத்தியுள்ளது.

மக்கள் பிரதிநிதித் துவச் சட்டம் 1951, பிரிவு 126ஏ விதிகளின்படி, யாதொரு நபரும் வாக் குப் பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊட கம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப் பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ளது.
ஒரு பொதுத் தேர்த லின்போது, வாக்குப்பதிவிற்கு நிர்ணயிக்கப் பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப் பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை கருத் துக் கணிப்பு வெளியிட தடை தொடரலாம்.
இடைத்தேர்தல்கள் ஒன்றாக நடை பெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவிற்கு நிர்ண யிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் முடிந்தபின் அரை மணி நேரம் வரை தொடரலாம்.

பல இடைத்தேர்தல் கள் வெவ்வேறு நாட்க ளில் நடைபெற்றால், வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப் பதிவிற்கு நிர்ணயிக்கப் பட்ட நேரத்தின் தொடக்கம் முதல், கடைசி வாக்குப் பதிவு முடிந்த அரைமணி நேரம் வரை தொட ரலாம்.

தேர்தல் ஆணையம், ஒரு பொது ஆணைப்படி, இவற்றை கருத்தில் கொண்டு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும். இந்த விதிகளின்படி ஏப். 19ஆம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 7 மணியிலிருந்து ஜூன் 1ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப் புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின் னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்பு வது (அது எதுவாயினும்) தடை செய்யப்பட வேண்டிய கால அளவு என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்காணும் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் தொடர்பாக வாக்குப் பதிவு முடிவடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு 48 மணி நேரம் முன் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல் லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட் பட, எந்தவொரு தேர் தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊட கத்தில் காட்சிப்படுத்து வது தடை செய்யப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தியுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும், யாதொரு நபருக் கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல் லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக் கப்படும்.
இவ்வாறு கூறியுள் ளது.

No comments:

Post a Comment