அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 12க்குள் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 5, 2024

அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 12க்குள் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு

featured image

சென்னை,ஏப்.5-  அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை துரிதப்ப டுத்தி ஏப்ரல் 12ஆம்தேதிக்குள் 4 லட்சம் இலக்கை எட்ட வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2024-2025) மாணவர் சேர்க்கை பணிகள் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை (2.4.2024) 3 லட்சத்து298 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதற்கிடையே அங்கன்வாடிக ளில் படித்து 5 வயதை நிறைவு செய் யும் 3 லட்சத்து 31,546 குழந்தைகளின் விவரம் மாவட்டக் கல்வி அலுவலர் களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதவிர தற்போது சுகாதாரத் துறை மூலம் 2018ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைக ளின் புள்ளி விவரம் பெறப்பட்டுள் ளது. அவையும்பள்ளிகளுக்கு எமிஸ் தளம் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆசிரியர்கள் அந்த குழந்தைகளின் பெற்றோர் அலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதிலுள்ள விவரங்க ளுக்கு பதில்களை பெற்று பதிவு செய்ய வேண்டும். அதாவது, தங்கள் குழந்தை களை பள்ளிகளில் சேர்க்கை செய்து விட்டீர்களா என்பதை கேட்க வேண்டும்.
இல்லையெனில் அவர்களின் குழந்தைகளை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க ஆலோ சனை வழங்க வேண்டும். இத்தகைய பணிகள் மூலம் மாணவர் சேர்க் கையை துரிதப்படுத்த வேண்டும். மேலும், ஏப்.12-க்குள் 4 லட்சம் மாணவர்களை சேர்க்கை செய்ய இலக்கு வைத்து பணியாற்ற வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment