புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு சி.பி.அய். விசாரணைக்கு நாராயணசாமி வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 11, 2024

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு சி.பி.அய். விசாரணைக்கு நாராயணசாமி வலியுறுத்தல்

featured image

புதுச்சேரி, மார்ச் 11- புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இரங்கல் செலுத்தும் வகையில் மெழுகுவத்தி ஏந்தி ஊர் வலம் நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.
ஊர்வலத்தை மேனாள் முதல மைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்து பங்கேற்றார். சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற் றும் 150-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் கையில் மெழுகுவத்தியுடன் ஊர்வலமாக சென்றனர். அண்ணா சிலை அருகில் தொடங்கிய ஊர் வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக சென்று நேரு வீதி, -மிஷன் வீதி சந்திப்பில் நிறைவடைந்தது.

பின்னர் மேனாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களி டம் கூறியதாவது:
கெட்ட வாய்ப்பாக முதலமைச் சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சிறுமியின் உடலுக்கு இரங்கல் செலுத்த செல்லவில்லை.
இது அந்த குடும்பத்தை மட்டு மல்ல, புதுச்சேரி மாநில மக்களை அவமதிக்கின்ற வேலை.

சிறுமியின் வீட்டுக்கு சென்றால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தாய்மார்கள் தோலை உரித்து விடு வார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் தான் அவர்கள் போகவில்லை. அப்படி இருந்தா லும் கூட இரங்கல் செலுத்த வேண் டிய கடமை, பொறுப்பு ஆட்சி யாளர்களுக்கு உண்டு. அதனை அவர்கள் செய்ய தவறிவிட் டார்கள்.
சிறுமியின் கொலைக்கு உரிய நீதி, நியாயம் கிடைக்க வேண்டும். இந்த வழக்கு முறையாக விசாரிக் கப்பட்டு யார், யார் சம்பந்தப்பட்டு உள்ளார்களோ அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்க ளுக்கு மரண தண்டனை வாங்கி கொடுக்கின்ற வேலையை இந்த ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.
உங்களால் ஆட்சி செய்ய முடிய வில்லை, மக்களை பாதுகாக்க முடி யவில்லை என்றால் முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவியிலிருந்து வில கிச் செல்ல வேண்டும் என்று ஏற் கெனவே ‘இண்டியா’ கூட்டணி சார்பில் கோரிக்கை வைத்துள் ளோம்.

குறிப்பாக புதுச்சேரி மாநிலத் தில் மோடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி அனைத்துமே பொய் யாகிவிட்டது. புதுச்சேரியை பெஸ்ட் மாநிலமாக (சிறந்த மாநி லம்) மாற்றுவதாக சொன்னார். மோசமான மாநிலமாக மாற்றிவிட்டார். மோடி புதுச்சேரி மாநி லத்துக்கு நிதி கொடுப்பேன், பாதுகாப்பு கொடுப்பேன் என்றார். ஆனால், எதையுமே கொடுக்க வில்லை.
ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி, புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி என இரட்டை எஞ்சின் ஆட்சி வந்தால் பாலாறும், தேனா றும் ஓடும் என்று சொன்னார். ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் கொலைகள் தான் நடக்கின்றன. கஞ்சா தாராளமாக விற்கப்படு கிறது.

இதனை கட்டுப்படுத்த இந்த ஆட்சியாளர்கள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. ஆகவே இந்த ஆட்சியாளர்கள் கூண் டோடு பதவி விலகிப் போக வேண்டும்.
சிறுமி கொலையில் காவல் துறை விசாரணையை இப்போது தான் ஆரம்பித்துள்ளனர்.
போக்சோ வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு 3 மாதத்தில் முடிக்கப் பட வேண் டும். அந்த சட்டத்தின் அடிப் படையில் பாதிக்கப்பட்ட குடும் பத்துக்கு ரூ.1 கோடி கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் 2 பேர் மட்டுமல்ல, எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பலர் இருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட விவேகா னந்தன் என்பவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் மாவட்ட பொறுப் பாளராக இருந்துள்ளார். அவர் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர். அதற்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்துள்ளார். இரண்டு கட்சியிலும் அவர் இருந் துள்ளார். விவேகானந்தனை பாது காக்கவே சிறுமியின் கொலை வழக்கு காலதாமதமாகி இருக்கி றது.
சிபிஅய் விசாரணை நடத்தி னால் பாரபட்சமின்றி விசாரணை நடைபெறும். சிறுமியின் கொலை வழக்கை சிபிஅய் விசாரணைக்கு உத்தவிரவிட வேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment