சென்னை,மார்ச் 11- மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசு கவிழும் என்றும், தி. மு.க.வையும் காங்கிரசையும் பிரிக்க முடியாது என்பது மீண் டும் ஒருமுறை நிரூபிக் கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
தெளிவாக முடிவாகி உள்ளது
தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஒப் பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத் தில் கையெழுத்தான பின்னர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செய லாளர் கே.சி. வேணு கோபால் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீண்டும் தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு ஏற் பட்டுள்ளது எங்களுக்கு மிகவும் மகழ்ச்சியான தருணமாக உள்ளது.
மாநிலங்களை அவம திக்கும், கூட்டாட்சிக்கு எதிரான, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை தாக்கும் மத்திய அர சுக்கு எதிராக போராடும் மற் றொரு தலைவராக தமிழ் நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.
தமிழ்நாட்டின் பெருமை எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு நாளும் பிரதமர் மோடியும். ஒன்றிய அரசும் தமிழ் நாட்டின் பெருமைக்கு எதிராக செயல்படுகின் றனர்.
எனவே, நாட்டை ஆளுகின்ற மாநிலங் களை அவமதிக்கும். ஏழைகளுக்கு எதிரான அரசுக்கு எதிராக போரா டுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான தீவிர ஆலோசனைக்கு பின்னர் இறுதியாக தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டை தெளிவாக முடிவு செய்துள்ளது.
40 தொகுதியிலும் வெற்றி
நாங்கள் 40 தொகு திகளிலும் வெற்றி பெறு வோம். நாட்டில் தமிழ் நாடு ஒரு புதுமையான திட்டத்தை அமைப்பது டன் புதிய மாதிரியான மாநிலமாக அமையும்.
மக்களுக்கு எதி ரான, ஏழைகளுக்கு எதிரான ஒன்றிய அரசு கவிழும்.
கலைஞர் உயிருடன் இருந்தபோதும் காங் கிரஸ் தி.மு.க.வுடன்தான் கூட் டணியில் இருந்தது. தற் போது மீண்டும் ஒரு முறை தி.மு.க.வையும் காங்கிரசை யும் பிரிக்க முடியாது என் பது நிரூ பிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஒன்றாக போராடுவோம், ஒன் றாக செல்வோம். ஒன் றாக வெற்றி பெறுவோம் இதுதான் இன்று நாங் கள் விடுக்கும் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment