கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 1, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.3.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* மக்களவை தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும் தலா இரண்டு தொகுதிகள். திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிவு.
* பிரதமர். – அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்த திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.
* தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
* மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்தியாவி லேயே முன்னணி மாநிலமாக விளங்கிடும் தமிழ்நாடு, தொடர்ச்சியாக, இந்நிலையை உறுதிப்படுத்தி வருகிறது. மின்னணுவியல் ஏற்றுமதி தற்போது 7.37 பில்லியன் டாலரை அடைந்துள்ளது. மார்ச்சுக்குள் 9 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய சாதனை படைக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால், சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.1,500 அல்லது ரூ.2,000 ஆக உயர்த்திடுவார்கள், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா எச்சரிக்கை
தி டெலிகிராப்:
* இமாச்சலப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவசரமாக கூடுகிறது மாநில அமைச்சரவைக் கூட்டம். மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த 6 காங். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை இமாச்சல் அமைச்சரவை கூடு கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் ஆபரேஷன் தாமரையை முறியடிப்பதில் பிரியங்கா காந்தி முக்கிய பங்கு வகித்தார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
தேர்தலுக்கு முன் சுரங்க வழக்கில் தனக்கு சிபிஅய் அழைப்பாணை அனுப்பியதற்கு பதிலளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் – அவர்கள் (சிபிஅய்) பாஜக வின் அணி போல செயல்படுவதாக தெரிவித்தார்.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment