திருச்சி, மார்ச் 18- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாளினை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் பரிசோதனை முகாம் மற்றும் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது.
பொது மருத்துவ முகாம்
பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் பொதுமக்கள் மற்றும் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் பயன்பெறும் வகையில் 09.03.2024 அன்று பொதுமருத்துவ முகாம், மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடை பெற்றது.
காலை 9 மணியளவில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் திருச்சி சிறீ சபரி மருத்துவமனையின் நீரிழிவு நோய் மருத்துவர் சி.வெங்கடேசன், கிருஷ்ணா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் மருத்தூர் பரிமளா ராணி, திருச்சி மற்றும் திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர்கள் மரு.
பி.மஞ்சுளா வாணி, மரு. சீனிவாசன், எடிசன் பரிசோதனை மய்ய ஆய்வக தொழில்நுட்பநர் மலர் மன்னன் மற்றும் மருத்துவக் குழுவினர் தலைமையில் பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 140 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
புற்றுநோய் பரிசோதனை முகாம்
பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் திருச்சி ஹர்ஷ மித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனையின் பெண்கள் நல மருத்து வர்கள் மரு. சுகிர்தா, மரு. ராசாத்தி மற்றும் மருத்துவக்குழுவினர் பங்கேற்ற பல் மருத்துவம், மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் பெரியார் மருந் தியல் கல்லூரியில் நடைபெற்றது.
மாலை 6 மணி வரையில் முதல்கட்டமாக நடைபெற்ற இம்முகாமில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக மகளிர் பணித்தோழர்கள் 54 பேர் கலந்து கொண்டு பயனடைந்த னர். இரண்டாம் கட்ட பரிசோதனை 13.03.2024 அன்று காலை 9 மணிக்கு துவங்கியது. மாலை 5.30 மணி வரையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் 66 பெண்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்புற்றுநோய் பரிசோதனை முகாமில் மொத்தம் 120 மகளிர் பணித்தோழர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.
சுய சுகாதாரம் – விழிப்புணர்வு
முன்னதாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல மாணவிகளுக்கு 09.03.2024 அன்று கிருஷ்ணா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் மரு. பரிமளா ராணி சுய சுகாதாரம், மாதவிடாய் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நெறி முறைகள், கை கழுவுதலின் முக்கி யத்துவம் மற்றும் ஊட்டச்சத்து முறைகள் குறித்து விளக்கினார்.
சிறப்புக் கருத்தரங்கம்
திராவிட மாணவர் கழகம் மற்றும் பெரியார் மன்றத்தின் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம் 11.03.2024 அன்று காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத் தலைவர் செல்வி இல.அனிதா வரவேற்புரையாற்றினார்.
முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தமது தலைமையுரையில் நிறுவனத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளினை முன்னிட்டும், மகளிர் நாளினை முன்னிட்டும் பொது மருத்துவ முகாம்கள் மற்றும் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக மக ளிர் சமுதாயம் பயனடையும் வகையில் நடைபெற்றது என்றும், தொடர்ந்து பெரியார் கல்வி நிறுவனங்களில் இருக்கக்கூடிய பெண் பணித் தோழர்கள் நலமுடன் திகழ 13ஆம் தேதியும் புற்றுநோய் பரிசோதனை முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது என்றும் உரை யாற்றினார். (அதன்படி நடந்து முடிந்தது)
மேலும் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட, புறக் கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தான் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் என்றும், அத்தகைய தலை வரை 95 ஆண்டுகள் நலமுடன் பேணிக் காத்தவர் அன்னை மணியம்மையார் என்றும் உரையாற்றினார்.
அன்னையின் தைரியம், தன்னம் பிக்கை, துணிச்சல், போர்க்குணம் போன்றவற்றை பெண்கள் பின்பற்றி னால்தான் பெண்களுக்கு எதிரான வன்கொடு மைகளை தடுக்க முடியும்.
குடும்பத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் பொழுது சுய ஒழுக்கம், சுயகட்டுப் பாட்டினை கற்றுத்தர வேண்டும்.
அப்போதுதான் புதுச்சேரியில் நடைபெற்ற சம்பவங்கள் போல் நடை பெறாமல் தடுக்க முடியும் என்றும், பெரியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரண மாக திகழ்ந்து நலமான சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு திராவிட மாணவர் கழகத்திற்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் “தியாகத்தின் மறு உருவம் அன்னை மணிம்மையார்” என்ற தலைப்பில் திராவிடர் மாணவர் கழகப் பொறுப்பார் மாணவி தி.லிசாந்தி அன்னையின் சமுதாயப் பணிகளையும் அதற்கான தியாகங்களையும் விளக்கிய தோடு நாகம்மையார் குழந்தைகள் இல்லம் உருவாக்கத்தை மாணவர்களின் மத்தியில் சிறப்பாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவி பா.ஜில்லஸ் ரெமிளா அவர்கள் “பெண்கள் சமுதாயத்தின் முன்மாதிரி அன்னை மணியம்மையார்” என்ற தலைப்பில் பெண்ணினம் பின்பற்ற வேண்டிய வீரப் பெண்மணி அன்னையார் என்ப தனை
தெளிவாக எடுத்துரைத்தார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, பெரியார் மன்றச் செயலர் திருமதி அ.சமீம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் மாணவி வி.ஜாக்லின் அவர்கள் நன்றி யுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக காலை 9 மணிளவில் அன்னை மணியம்மையார் அவர்களின் படத்திற்கு முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்கள் தலைமையில் திராவிட மாணவர் கழக உறுப்பினர் களால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இம்மருத்துவ முகாம்கள் மற்றும் கருத்தரங்குகள் அனைத்திற்குமான ஏற்பாடுகளை பெரியார் மணி யம்மை மருத்துவமனை செவிலியர்கள், ஹர்ஷ மித்ரா புற்றுநோய் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ அரு ணாச்சலம், பெரியார் நலவாழ்வு சங்கம், நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் பெரியார் மன்றம் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment