ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உடனடியாக பதவி தருவது நீதித்துறைக்கு தலைகுனிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உடனடியாக பதவி தருவது நீதித்துறைக்கு தலைகுனிவு

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து

கோட்டயம், மார்ச் 12- முக்கியமான வழக்குகளில் ஒன்றிய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பல நீதிபதிகள் உடனடியாக புதிய பதவி நியமனம் பெற்றுள்ளனர். இது நீதித்துறையின் பாகுபாடற்ற தன்மையைக் குறை மதிப்பிற்கு உட் படுத்தி தலைகுனிவை ஏற்படுத்து கிறது என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார்.
கேரளம் மாநிலம் கோட்ட யத்தில் தர்ஷன் சன்ஸ்காரி கேந் திரா ஏற்பாடு செய்திருந்த சொற் பொழிவில், “இந்தியக் குடியரசு மீட்பு” என்ற தலைப்பில் அவர் பேசுகையில் மேலும் கூறியதாவது:
சுயமாக செயல்படும் நீதிபதி களை நியமிக்காமல் ஒன்றிய அரசு தலையிடுகிறது. முஸ்லிம் நீதிபதி கள் நியமிக்கப்படவில்லை.
நீதிபதிகள் புலனாய்வு அமைப் புகளால் கண்காணிக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, அரசுக்கு ஏற்ற வாறு தீர்ப்புகளை உருவாக்கு கின்றனர். நீதித்துறை ஊழலில் இருந்து முற்றிலும் விடுபட்டது என்று கூற முடியாது.

வாக்கு இயந்திரங்களில் முறைகேடு
உச்சநீதிமன்றத்தில் இருந்தும், முக்கியமான பிரச்சினைகளில் நடு நிலையான தீர்ப்புகள் வருகின்றன. இத்தகைய தீர்ப்புகளில் மேலும் செல்வாக்கு செலுத்த இந்த நிய மனங்கள் ஒரு ‘கருவியாக’ மாறக் கூடும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப் பது ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதாகும்.
ஊடகங்களில் விளம்பரம் செய்து, பணம் மற்றும் செல்வாக் குடன் தேர்தல் முடிவுகள் வாங்கப் படுகின்றன. ஊடகங்கள் மோடி ஊடகமாக மாறி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment