அரூர், மார்ச் 23- அரூர் உலகம்பட்டி யில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கலை நிகழ்ச் சியுடன் எழுச்சி திருவிழாவாக நடைபெற்றது.
அரூர் கழக மாவட்ட திரா விடர் கழக மகளிர் அணி மக ளிர் பாசறை சார்பில் அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்தநாள், உலக மகளிர் நாள் விழாவை முன் னிட்டு கொலகம்பட்டி விளை யாட்டு திடலில் 13-.3.2024 அன்று மாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் ஊர் வலமாக சென்று, அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திரா விடர் கழக மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ் செல்வி மாலை அணிவித்தார்.
கலை நிகழ்ச்சி
டாக்டர் திருத்தணி பன்னீர் செல்வம் கலைக்குழுவின் இசை நிகழ்ச்சியை மாநில திமுக ஆதி திராவிட நலக்குழு துணைச் செயலாளரும், மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவருமான சா.இராஜேந்திரன் – அச்சம் என் பது மடமையடா என்னும் பாடலை பாடி தொடங்கி வைத் தார். அன்னை தெரசா கிராமிய கலைக்குழுவின் சார்பில் கும்மியாட்டம் நடைபெற்றது தொடர்ந்து தீட்சன்யா என்ற அய்ந்து வயது மாணவி தந்தை பெரியார், அம்பேத்கர் குறித்து பேசி அனைவரின் பாராட்டுத லையும் பெற்றார். முற்போக்குக் கொள்கையாளர் மாயன், தங் கம்மாள் ஆகியோர் புரட்சி பாடல்களை பாடி சிறப்பித்தனர்.
படத்திறப்பு
மகளிர் அணி தோழர்கள் முன்னிலையில் கொள்கை முழக்கம் இட மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி அன்னை மணியம்மையார் படத்தை திறந்து வைத்து தொடக்க உரையாற்றினார்.
பொதுக்கூட்டம்
ஆர்.மணிமேகலை தலைமை ஏற்க எம்.வேல்விழி வரவேற்பு ரையாற்றினார். கழகக் காப்பா ளர் அ.தமிழ்ச்செல்வன், அம்மாப் பேட்டை உமா, வேப்பநத்தம் பெ.கல்பனா, மூ.சிவகுமார் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மாவட்ட இளைஞரணி தலை வர் த.மு.யாழ்திலீபன் ஆகியோர் கருத்துரைக்கு பின் தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன், மாநில கலைத் துறை செயலாளர் மாரி கருணா நிதி ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற உழைத்த மகளிர் அணித் தோழர்கள் மணிமேகலை, வேல்விழி, உமா, கல்பனா மற் றும் தோழர்களுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் சிறப்பு செய்தார். கொலகம்பட்டியில் திராவிடர் கழக பொதுக்கூட்ட நிகழ்ச்சி முதல் கூட்டம் என்றாலும் ஊர் திருவிழா போல வருகை தந்த 300 மேற்பட்டோரில் 200 பேர் பெண்களாகவே கலந்து கொண்டனர் என்பது சிறப்புக் குரியதாகும். ஊத்தங்கரை ஒன் றிய செயலாளர் சிவராஜ், போதகர் ஜெயமணி, வேப்பநத் தம் கிருஷ்ணன், கவிஞர் மு. பிரேம்குமார், ஒன்றிய கழக தலைவர் சோலை துரைராஜ், பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் பிளவங்கன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ராஜி கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறு தியில் ஆசிரியர் மு.சிவக்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment