டில்லி,மார்ச் 14- குடியுரிமை திருத்த சட்டத்தை அமல் படுத்துவதற்கான விதிமுறை கள் வெளியானதை தொடர்ந்து, அச்சட்டம் 11.3.2024 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல் செய்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், வங்கதேசம் ஆகிய நாடு களில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்து, சீக்கியம், பவுத் தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்த வர்கள் மத ரீதியிலான துன் புறுத்தலின் காரணமாக அங் கிருந்து வெளியேறி இந்தியா வில் அகதியாக தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு குறிப் பிட்ட சில ஆண்டுகள் கழித்து குடியுரிமை வழங்க ஒன்றிய பா.ஜ.க. அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன் றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்ட மானது.
2020ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறை களை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும்.
ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட் டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
எனவே, விதிமுறைகள் வெளி யிடப் படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு உறுதி பூண்டிருப் பதாக கடந்த டிசம்பர் மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன. இந்த நிலையில், 4 ஆண்டு களுக்கு பிறகு சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதி களை ஒன்றிய அரசு 11.3.2024 அன்று வெளியிட்டது.
மக்களவை தேர்தல் விரை வில் நடைபெறவுள்ள நிலை யில் சிஏஏ சட்ட அறிவிக் கையை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிஏஏ சட்டம் அமல்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்து வதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல் செய்துள்ளது.
சிஏஏ சட்டத்தை அமல் படுத்துவதை நிறுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள் ளது. அதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது. அவசர வழக் காக விசாரிக்க உச்ச நீதிமன் றத்தில் முறையிட இருப்பதாக வழக்குரைஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment