புதுடில்லி, மார்ச் 23- பதஞ்சலி ஆயுர்வேத நிறு வனத்தின் நிர்வாக இயக் குநரும், யோகா குரு பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளரு மான ஆச்சார்யா பாலகி ருஷ்ணா, நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் மருத்துவத் திறன் குறித்த தவறான விளம்பர கூற்றுக்காக உச்ச நீதிமன் றத்தில் மன்னிப்பு கோரி யுள்ளார்.
பதஞ்சலி நிறுவனத் தின் தவறான விளம்பர சர்ச்சை தொடர்பான வழக்கின் தாக்கீதுகளுக்கு பதில் அளிக்காதது குறித்து நீதிமன்றம் கடுமையாக கண் டனம் தெரிவித்த மறுநாளான 21.3.2024 அன்று, பதஞ்சலி நிறுவ னம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக் கல் செய்திருந்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் ஹிமா கோலி, அசானு தீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ் ணனை ஏப்ரல் 2ஆ-ம் தேதி நேரில் ஆஜராகு மாறு உத்தர விட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பால கிருஷ்ணா தாக்கல் செய்த பிரமாணப் பத்தி ரத்தில், “சட்டத்தின் ஆட்சி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
எதிர் காலத்தில் இது போன்ற விளம்பரங்கள் வெளியிடப்படாது என்பதை நிறுவனம் உறுதியளிக்கிறது.
வாழ்க்கை முறை மற் றும் நோய்களுக்கு ஆயுர் வேத ஆராய்ச்சியின் மூல மாக பழங்கால குறிப்பு கள் மற்றும் பொருட் களை பயன்படுத்தி பதஞ்சலி பொருட்களைப் பயன்படுத்தி நாட்டு மக் கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அந்த விளம்பரங்களின் நோக்கம்.
ஒவ்வொரு குடிமக னும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் நோய்களுக்கான மருத்து வச் சிக்கலுக்கு முழுமை யான, சான்றுகள் அடிப் படையிலான தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட் டின் சுகாதார கட்ட மைப்பின் சுமையைக் குறைப்பதே ஒரே நோக் கம்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வழக்கு பின்னணி: ஆயுர்வேத தயாரிப்பு களை தயாரித்து விற் பனை செய்யும் பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் பாபா ராம் தேவுக்கு எதிராக, இந்திய மருத்துவ சங்கமான அய்எம்ஏ (மிவிகி) தொடர்ச் சியாக பல்வேறு வழக்கு களை தொடுத்திருந்தது.
குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள் பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல் வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந் நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய் வதாக அய்எம்ஏ குற்றஞ்சாட்டியது.
நவீன மருத்துவமான அலோபதிக்கு எதிராக பல்வேறு அவதூறு களைப் பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டி யது.
யோகா குரு ராம்தேவ் இணை நிறுவனராக இருக்கும் பதஞ்சலி ஆயுர் வேத வழக்கினை கடைசியாக கடந்த நவம்பர் மாதம் விசாரித்த நீதி மன்றம், “யோகா குரு பாபா ராம்தேவுக்கு என்னவாயிற்று?
அவர் யோகா கலையை பிரபலப்படுத் தியதால் அவர் மீது மரியாதை கொண்டோம். ஆனால், அவர் மற்ற மருத்துவ முறைகளை விமர்சிப்பது தவறு.
அவ ருடைய நிறுவன விளம்பரங்கள் மருத்துவர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிக்கின்றன” என்று அப்போது தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment