உலகம் கண்ட மிகப் பெரிய பெண்ணியவாதிகளில் ஒருவர் தந்தைபெரியார் : கனிமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

உலகம் கண்ட மிகப் பெரிய பெண்ணியவாதிகளில் ஒருவர் தந்தைபெரியார் : கனிமொழி

featured image

சென்னை, மார்ச் 22- டி.எம்.கிருஷ்ணா மியூசிக் அகாடமியால் சங்கீத கலாநிதி என்று அங்கீகரிக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அவரை எதிர்ப்பது மிக தவறானது என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
டிஎம் கிருஷ்ணா மியூசிக் அகாடமி யால் சங்கீத கலாநிதி என்று அங்கீகரிக் கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இது இசை உலகில் சிலரை சீண்டி உள்ளது. டி எம் கிருஷ்ணாவின் தனிப்பட்ட நம்பிக்கைகள், அவர் பெரியார் மீது வைத்துள்ள அபிப்பிரா யங்கள் காரணமாக அவர் மீது கடு மையான வெறுப்பு உமிழ்ப்படுகிறது .
பெரியாரின் கருத்துகளை அடிப் படையாகப் படித்தால், அவர் உலகம் கண்ட மிகப் பெரிய பெண்ணியவாதிகளில் ஒருவர் என்பது நமக்கு தெரியும். அவர் ஒருபோதும் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்ததில்லை. எந்த ஒரு பிரிவினரின் இனப்படுகொலைக்கும் அவர் அழைப்பு விடுத்தது இல்லை.

சமீபத்தில் கருநாடகாவை சேர்ந்த பாஜக ஒன்றிய அமைச்சர் ஒருவர் தமிழர்களுக்கு எதிராக வெறுப்புடன் பேசினார். அதற்கு சமமான வெறுப்புடன் இப்போது டி.எம்.கிருஷ்ணாவை எதிர்க் கிறார்கள். நம் நாடு நம்பும் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்., ஆனால் அதற்காக டி.எம்.கிருஷ்ணாவை இப்படி எதிர்ப்பது சரியல்ல என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கருநாடக இசையை எல்லா மக்களி டமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கரு நாடக இசைப் பாடகர் டி.எம் கிருஷ்ணா விற்கு எதிராக, அவரின் அரசியலை காரணம் காட்டி இப்படி கருத்து தெரிவிப்பது தவறானது என்று பலரும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
மியூசிக் அகாடமி தலைவர் முரளி, இது விளம்பரத்திற்காக செய்யப்பட்ட எதிர்ப்பு, இந்த விருதை அவமானப்படுத்த வேண்டும் என்று, தேவையில்லாத பிரச்சினையை உரு வாக்க வேண்டும் என்று இந்த முடிவை ரஞ்சனி, காயத்ரி எடுத்துள்ளனர், என்று ரஞ்சனி, காயத்ரி மீது கடுமையான பதில் விமர்சனங்களை வைத்துள்ளார்.

ரஞ்சனி, காயத்ரி கூறுவதென்ன?
“2024ஆம் ஆண்டு மியூசிக் அகாட மியின் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்தும், டிசம்பர் 25 அன்று எங்கள் கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுவதாக நாங்கள் முடிவை எடுத்துள்ளோம்.
டி.எம்.கிருஷ்ணா தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
டி எம் கிருஷ்ணா கருநாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி யவர். வேண்டுமென்றே மகிழ்ச்சியுடன் உள்ள சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார்.

அவரது செயல்கள் ஒரு கருநாடக இசைக்கலைஞராக இருப்பதில் அவமான உணர்வைப் பரப்ப முயன்றது மற்றும் இசையில் ஆன்மிகத்தை அவர் தொடர்ந்து இழிவுபடுத்தி வந்தார். அவர் மில்லியன் கணக்கான கருநாடக இசை கலைஞர்களை கொச்சைப்படுத்தி உள் ளார். கலைத்திறன், கடின உழைப்பு மற்றும் கருநாடக இசையை அவமதித்து உள்ளார்.
இசையை மக்களிடம் கொண்டு செல்வதில் தவறு இல்லை. ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. முக்கியமாக பெரியார் போன்ற தலைவரை புகழ்ந்து பாடிய டி.எம் கிருஷ்ணாவிற்கு விருது வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடி யாதாம்.” இவ்வாறு ரஞ்சனி – காயத்ரி ஆகியோர் தங்களின் வெறுப்புணர்வை கக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment