கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 18, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

18.3.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ தேர்தல் பத்திரங்கள் பெற்ற கட்சிகளின் விவரங் களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பாஜக ரூ.6986.5 கோடி பெற்றுள்ளது அம்பலம்.
♦ மக்களை பிளவுபடுத்தும் பா.ஜ. விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும்: மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
♦ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமின்றி மோடியால் வெற்றி பெற முடியாது என ராகுல் காந்தி பேசினார். மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஒரு முகமூடிதான். அவருக்கு 56 அங்குல மார்பு இருக்கிறது என்கின்றனர். ஆனால், அவர் வெறும் கூடுதான். உண்மையில், அரசரின் உயிரானது மின்னணு வாக்கு இயந்திரத்தில்தான் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இல்லாமல் மோடியால் வெற்றி பெற முடியாது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் வழிபாடு நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் படங்களை பொது இடங்களில் இருந்து அகற்றுங்கள்’ என புனே ஆர்வலர்கள் தேர்தல் ஆணையத்திற்கு தாக்கீது அனுப்பியுள்ளனர்.

தி டெலிகிராப்:
♦பாஜகவுக்கு எதிரான ‘எதிர்ப்பு’ அழைப்பில் சிவில் சமூகம், ராகுல் காந்தியை அரசமைப்பு சட்டத்தின் மீட்பர் என்று பாராட்டு. பாரத் ஜோடோ நடைப் பய ணத்தின் முடிவில் நியாய சங்கல்ப் சபா என்றழைக் கப்பட்ட கூட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம் என பொதுமக்கள் உறுதிமொழி எடுத்தனர். சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் காந்தியார் அவர்களின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி இந்த உறுதிமொழியை நிறைவேற்றினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ குடியுரிமை திருத்த மசோதா ஒரு முன்னோடி, பாஜக அடுத்ததாக வெவ்வேறு மொழி பேசும் மக்களை குறிவைக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எச்சரிக்கை.

– குடந்தை கருணா

No comments:

Post a Comment