கோவை ஈஷா யோகா மய்ய நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் பாதிப்பாம் டில்லி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 21, 2024

கோவை ஈஷா யோகா மய்ய நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் பாதிப்பாம் டில்லி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை

கோவை, மார்ச் 21- கோவை ஈஷா யோகா மய்ய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கோவை ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும் ஈஷா யோகா மய்யத்தில் அண்மையில் மகாசிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப் பட்டது.
இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்மற்றும் 3 மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கடந்த 4 வாரங்களாக தலைவலி இருந்த நிலையிலும் மகா சிவராத்திரி விழா மற்றும் டில்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார்.

கடந்த 17ஆம் தேதி தலைவலி அதிகரித்ததால் டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இடது காலும் பலம் இழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘‘சில நாட்களுக்கு முன்னர் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டார். அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.
சத்குருவின் உடல்நிலையில், எதிர்பார்த்ததைவிட சிறப்பான முன்னேற்றம் உள்ளது. அது மட்டுமன்றி, ‘சத்குரு மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி, அவராகவே குணப்படுத்திக் கொள்கிறாராம்’.

No comments:

Post a Comment