பாலியல் வன்முறை செய்பவர்களை மோடி காப்பாற்றுபவர்! காங்கிரஸ் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

பாலியல் வன்முறை செய்பவர்களை மோடி காப்பாற்றுபவர்! காங்கிரஸ் விமர்சனம்

புதுடில்லி,மார்ச் 20– மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத் தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார்.
இளம் மல்யுத்த வீராங்கனைக ளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம் சாட்டிய மல்யுத்த வீரர், வீராங்க னைகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து வில கினார்.

இதனையடுத்து இந்திய மல் யுத்த சம்மேளனத் தலைவர் தேர் தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவா ளர்கள் போட்டியிட அனுமதி வழங்கக்கூடாது என்று மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தினர்.
எனினும், தேர்தலில் களம் கண்ட பிரிஜ் பூஷணின் ஆதரவா ளர் சஞ்சய்சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதை அறிந்து அதிர்ச்சி தெரிவித்த மல்யுத்த வீரர், வீராங்கனை கள் தங்களது பதக்கங்களை ஒப் படைப்பதாகவும், மல்யுத்தத் தில் இருந்தே விலகுவதாகவும் அறிவித்தனர்.
அந்த வரிசையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத் தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழு தினார்.

அந்த கடிதத்தில், “ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவு கலைகிறது. ஒவ்வொரு பெண் ணும் கண்ணியத்துடன் வாழ விரும் புவர். ஆனால் கண்ணியத்துடன் வாழும் வாழ்க்கையில் விருதுகள் சுமையாகக் கூடாது என்பதால், நான் வாங்கிய விருதுகளை திரும்ப கொடுக்கிறேன்,” என்று எழுதியி ருந்தார்.
இதனையடுத்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தனது கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பி அளித்தார். தனது விருதுகளை பிரதமர் அலு வலகத்தில் ஒப்படைக்க முனைந்த அவருக்கு, டில்லி காவல்துறையினர் அனுமதி மறுத்து வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர் அந்த விருதுகளை பிரதமர் அலுவலகம் செல்லும் சாலையின் நடுவில் வைத்துவிட்டுத் திரும்பினார்.
பின்னர் காவல்துறையினர் அதை கைப்பற்றினர். மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வீரேந்தர் சிங் யாதவ் ஆகியோரும் தங்களது விருதுகளை திருப்பி அளித்துள் ளனர். இந்நிலையில், இதை விமர் சிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வினேஷ் போகத் படத்தை மோடி பார்க்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந் துள்ளது.
அந்த பதிவில், என் உயிரை பணயம் வைத்து பாலியல் வன் கொடுமை செய்பவர்களை காப் பாற்றுவேன் என்று நரேந்திர மோடி கூறுகிறார் என்று பதிவிட்டுள்ளது.

No comments:

Post a Comment