முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 10 லட்சம் புதிய பயனாளிகள்
அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
சென்னை,மார்ச்.2- தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த 33 மாதங் களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோ ருக்கு முதலமைச்சர் காப் பீட்டுத் திட்ட அட்டை புதிதாக வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பயனாளிகளுக்கு முதலமைச் சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டையில் 29.2.2024 அன்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகி யோர் கலந்து கொண்டு 1,013 பேருக்கு காப்பீட்டு அட்டை களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மாநக ராட்சி மண்டலக் குழுத் தலை வர் கிருஷ் ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
அப்போது செய்தியாளர்களி டம் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கூறியதாவது:
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தற் போது வரை 1.44 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட் டுள்ளன.
கடந்த ஆட்சிக் காலத்தில் 970 மருத்துவமனைகள் மட் டுமே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 1,829-ஆக உயர்ந் துள்ளது.
அதேபோன்று, கடந்த ஆட்சி காலத்தில் இத்திட்டத்தின் கீழ் 1,450 வகை சிகிச்சைகள் அளிக்கப் பட்டு வந்தன. திமுக ஆட்சியில் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள சிகிச்சைகளின் எண் ணிக்கை 1,513-ஆக உயர்ந்துள் ளது.
மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளைப் பொருத் தவரை இதற்கு முன்பு வரை இதயம், சிறுநீகர மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே இத்திட்டத் தில் இருந்தன.
ஆனால், தற்போது, கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், எலும்பு, எலும்பு மஜ்ஜை, விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் உள்பட 8 வகை யான உயர் அறுவை சிகிச்சைக ளுக்கு காப்பீட்டு திட்டம் பயன ளித்து வருகிறது.
இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 திட்டம் தமிழ்நாட்டில் 694 அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
விபத்தில் காயமடைந் தவர்களுக்கு இத்திட்டத் தின் மூலம் ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையில் அது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட் டுள்ளது.
இத்திட்டம் தொடங்கி 2 ஆண்டுகளில் இதுவரை 2,23,482 பேருக்கு சிகிச்சை அளித்து அவர்களது உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது. இதற்காக அரசின் சார்பில் ரூ.194.40 கோடி செல விடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் பொதுமக்களை உறுப் பினர்களாக சேர்ப்பதற்கு 100 இடங்களில் முகாம்கள் நடத்தப் பட்டன.
அதன்மூலம் 99,935 பயனாளி கள் இணைந்துள்ளனர். சென் னையில் மட்டும் 9,796 புதிய குடும்பங்கள் இத்திட்டத்தில் இணைந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த 33 மாதங்களில் 10,01,592 பேர் இத்திட்டத்தில் இணைந்திருக்கின்றனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment