17.3.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ எதிர்பார்க்கப்பட்ட மக்களவைக்கு 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ 2024 மக்களவை தேர்தல் இந்தியாவில் நீதிக்கான கதவை திறக்கும். கை (காங்கிரஸ் சின்னம்) நிலைமையை மாற்றும். இது சர்வாதிகாரத்திடம் இருந்து நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசமைப்பை காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாகும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூனா கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
♦ ‘கட்சியில் ஊழல் நிலவுகிறது’, பாஜகவின் வார்த்தை களுக்கும் செயலுக்கும் வித்தியாசம் உள்ளது” என குற்றம் சாட்டி, மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பாஜக விலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் விலகல்
♦பாஜக அடுத்த நாடாளுமன்றத்தில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” சட்டத்தை நிறைவேற்றினால், அது பிராந்தியக் கட்சிகளை ஒரு மூலையில் தள்ளும். அரசியலின் அடிப் படை மறுசீரமைப்பு ஒரு பெரிய ஒருமித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், முரட்டுத் தனமான பெரும்பான்மையின் அடிப்படையில் அல்ல என்கிறார் பேராசிரியர் அசுதோஸ் வர்சினி.
தி இந்து:
♦ தேசம் தாராவி மக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது, தரகர்களால் அல்ல என ராகுல் பேச்சு. மும்பையில் உள்ள தாராவியை சீரமைக்கிறோம் என்ற பெயரில் அதானியுடன் பாஜக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
♦ பாஜக எம்.பி. சி.எம். ரமேஷின் நிறுவனம் ரித்விக் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சன்னி அணை கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றவுடன் 45 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
தி டெலிகிராப்:
♦ மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசமைப்புத் திருத்தம் மற்றும் விரிவான சமூக, பொருளாதார மற்றும் ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நிறைவேற்றுவ தாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உறுதி.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment