ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது!

சென்னை,மார்ச்.3– ஜாதி, மதம், மொழி, இறைவழிபாட்டை அவ மதிக்கும் பேச்சுகள் போன்றவற்றை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 1.3.2024 அன்று அறிவுறுத்தியது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் போது அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் விதிகள் தொடர்பாக தேர் தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதில், ‘கோயில்கள், தேவாலயங்கள், மசூதி கள் உள்பட எந்த வழிபாட்டுத் தலங்களிலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற் கொள்ளக் கூடாது. ஜாதி, மதம், மொழி, இறைவழிபாட்டை அவ மதிக்கும் பேச்சுகள் போன்றவற்றை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது. ஏற்கெனவே தேர்தல் விதி களை மீறிய குற்றச்சாட்டில் ஆணை யத்தால் தாக்கீது அனுப்பப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர் கள் மீண்டும் அதே குற்றச்சாட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக் கப்படும். பொதுக்கூட்டங்களில் பேசும் போது அரசியல் கட்சியினர் நாகரி கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
தேர்தல் பரப்புரைகளை ஆக்கப் பூர்வமானதாகவும், சரியான தகவல் களுடனும் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களை திசை திருப்பும் வகையிலான பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது.
பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் சமூக வலை தளங்களிலும் கண்ணியமான பதிவு களை வெளியிட வேண்டும். எதிர்தரப் பினரை அவமதிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிடக் கூடாது. ஊடகங்களில் அங்கீகரிக்கப்படாத, தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
மக்களவை, 4 மாநில பேரவைத் தேர்தல் நடைபெறும் தேதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்பட்டு ஏப்ரல், -மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில் தேர்தல் விதிகள் அமலுக்கு வருவதற்கு முன் இந்த அறிக்கையை ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment