தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பா.ஜ.க. அரசு: கார்கே குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 5, 2024

தொழிலதிபர் நண்பர்களுக்காக விவசாய பொருள்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் பா.ஜ.க. அரசு: கார்கே குற்றச்சாட்டு

புதுடில்லி, மார்ச் 5- தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில திபர் நண்பர்களுக்கு ஆதரவாக மட்டுமே, நாட்டின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிர் களை ஏற்றுமதி செய்வ தற்கு பா.ஜ.க. அரசு தடை விதித்துள்ளதாக காங்கி ரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே குற்றம் சாட் டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாட்டிற்கு உணவு வழங்கும் விவசாயிகள் மகத்தான விளைச்சலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய விரும்பும்போது, மோடி அரசாங்கம் கோதுமை, அரிசி, சர்க் கரை, வெங்காயம், பருப்பு வகைகள் போன்றவற்றின் ஏற்றுமதியை தடை செய் கிறது. காங்கிரஸ் ஆட்சி யில் 153 சதவீதம் அதிக ரித்த விவசாய ஏற்றுமதி, பா.ஜ.க. ஆட்சியில் வெறும் 64 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. பா.ஜ.க. தனது பதவிக் காலம் முழு வதும் விவசாயிகளின் நலன்களை தியாகம் செய்யும் கொள் கையை கடைப்பிடித்து வருகிறது.
மோடி அரசாங்கத் தின் “எம்.எஸ்.பி. மற்றும் விவசாயிகளின் வருமா னத்தை இரட்டிப்பாக்கு தல்” போலியானது. நாட் டிலுள்ள 64 கோடி விவ சாயிகளின் முதுகை உடைக்க எந்தக் கல்லையும் விட்டு வைக்காத பா.ஜ.க. அரசு விவசாயிக ளுக்கு எதிரானது.
-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment