சென்னை,மார்ச் 19 – வெயில் அதிகரித்து வருவதால் பாதிப்பு களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட நிர் வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோடை வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால், வெப்பத்தின் எதிர் விளைவுகளை கையாளுவதற்கான விரிவான செயல் திட்டத்தை மாவட்டம் தோறும் வகுக்க வேண்டும்.
மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவு மருந்துகள், உப்பு – சர்க்கரைக் கரைசல் உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகளைத் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோயுள்ளவர்களுக்கு உப்பு – சர்க்கரை நீர்கரைசல், எலு மிச்சை சாறு ஆகியவை உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைக்க உதவும் என்பதால், அதைக் கட்டாயம் இருப்பு வைக்க வேண்டும்.
அதேபோல், பருவகால பழங் கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகமாக உட் கொள்ளுமாறும், வெயில் தீவிர மாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கு மாறும் அறிவுறுத்த வேண்டும்.
காலணி அணிதல், செயற்கை குளிர்பானங்கள், மது அருந்து தல், புகைப்பிடித்தலை தவிர்த் தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அவசர உதவிக்கும், ஆலோ சனைக் கும் 104 என்ற சுகாதார உதவி மய்யத்தை அழைக்கலாம் என்ற பிரசுரங்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment