பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு! இணைய வழியில் விண்ணப்பித்து வாங்கலாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

பிறந்த குழந்தைக்கு ஆதார் கார்டு! இணைய வழியில் விண்ணப்பித்து வாங்கலாம்!

சென்னை, மார்ச்.4-2018ஆம் ஆண்டில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்குUIDAI (குழந்தை) பால் ஆதார் அட்டையை பிரத்தி யேகமாக வடிவமைத்தது.
பெரியவர்களுக்கு வழக்க மாக வழங்கப்படும் ஆதார் அட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பால் ஆதார் நீல நிறத்தில் வழங்கப்படுகிறது.
பால் ஆதார் அட்டையிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தை களுக்கு ஹிமிஞிகிமி வழங்கும் தனித் துவமான அடையாள எண் இடம் பெற்றிருக்கும்.
வயதின் அடிப்படையில் ஆதாரில் எந்த விதமான வகைகளும் பிரிக்கப்படவில்லை.
5 வயதிற்கு உட்பட்ட குழந் தைகளுடைய நீல நிற ஆதார் ஒரு குழந்தையின் அடையா ளத்தை நிரூபிக்கவும, பல்வேறு விதமான அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கான பலனை பெறுவதற்கும் இது உதவி புரிகிறது.

குழந்தைகளுக்கான ஆதார் அட்டை (0-5): UIDAI இன் படி, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தை களுக்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்யப்படாது.
அவர்களது UID இடம் சார்ந்த தகவல் மற்றும் புகைப் படம் போன்றவற்றின் அடிப் படையில் பெற்றோர்களின் UID உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் குழந்தை 5 மற்றும் 15 வயதை அடைந்த பிறகு தனது பத்து விரல்களின் ரேகை கருவிழி மற்றும் புகைப்படம் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும். இதுகுறித்த அறிவிப்பு அசல் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை விண்ணப்பிப்பது எப்படி?

பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்களது ஆதார் அட்டையை பயன் படுத்தி குழந்தைக்கான ஆதார் அட்டைக்கு பதிவு செய்யலாம்.
இதில் குழந்தையின் இடம் சார்ந்த தகவல் மற்றும் புகைப் படத்தை வழங்க வேண்டும்.
இந்த ஆதார் அட்டை குழந்தை 5 வயதை அடைவதற்கு முன்பு வரை மட்டுமே செல்லு படி ஆகும். அதன் பிறகு வழக்க மான பயோமெட்ரிக் தகவல்கள் தேவைப்படும்.
தேவையான ஆவணங்கள் :

பிறப்பு சான்றிதழ் அல்லது மருத்துவமனை டிஸ்சார்ஜ் ஸ்லிப் மற்றும் பெற்றோரின் ஆதார் அட்டைகள்.
ஆன்லைனில் ஹிமிஞிகிமி என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அடுத்து ‘ ‘Get Aadhaar’  என்பதை கிளிக் செய்யவும். அதன் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கும் ‘Book an Appointment’ என்பதை முடுக்க வேண்டும். தொடர்ந்து இடத்தை (location) தேர்வு செய்து Proceed என்பதை முடுக்க வேண்டும்.
அதன் பின்னர் New Aadhar என்பதை முடக்கவும். பிறகு உபயோகத்தில் உள்ள தொலைப் பேசி எண்ணை பதிவிடவும்.
மேலும் கேட்கப்படும் விவரங் களை கொடுத்து Proceed மற்றும் Submit என்பதை பதிவிடவும்.
பிறகு தாங்கள் தேர்வு செய்த ஆதார் முகாமிற்கு சென்று தங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை பதிவு கொள்ளவும்.

No comments:

Post a Comment