தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார்
சென்னை,மார்ச் 20- கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேர ணியின்போது மாணவர்களை பங் கேற்க வைத்த அரசு உதவிபெறும் பள்ளிக்கு, விளக்கம் அளிக்கக் கோரி கல்வித் துறை தாக்கீது அனுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன் னிட்டு பாஜக சார்பில் கோவையில் நேற்று முன்தினம் (18.3.2024) நடைபெற்றவாகனப் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்தப் பேரணியில் சாய்பாபா காலனியைச் சேர்ந்த அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றது சர்ச் சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத் துமாறு, மாவட்ட தேர்தல் அதி காரியும், ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பால முரளியின் அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கல்வி அலுவலர் புனிதா, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று (19.3.2024) நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து கல்வித்துறை அதி காரிகள் கூறும்போது, பள்ளிக் குழந்தைகளை வாகனப் பேர ணிக்கு அழைத்துச் சென்றது தொடர்பாக 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக் குமாறு தாக்கீது அனுப்பியுள் ளோம்.
பள்ளி நிர்வாகத்தின் பதில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
தேர்தல் ஆணையத்தில் புகார்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகார் மனுவை, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரத சாஹுவிடம் திமுக வழக்குரைஞர் சரவணன் வழங்கி னார்.
அவர் கூறும்போது, ‘‘கோவை யில் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் பள்ளிக் குழந் தைகளும்அழைக்கப்பட்டு, பங் கேற்றுள்ளனர்.
தேர்தல் ஆணைய விதிமுறைப் படி, குழந்தைகளை எவ்விததேர்தல் பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், குழந்தைகள் முதல் முதியோர் வரை தங்களுக்கு ஆதரவு இருப்பதை காட்டுவதற் காக, பாஜகவினர் குழந்தைகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய புகாரில், ‘‘கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற வாகனப் பேரணியில், பள்ளி மாணவர்கள் பங்கேற்றது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, பிரதமர் மோடி பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியதும்,தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரான தாகும்’’ எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment