பன்மொழிகளை அறிந்தவர், டாக்டர் பட்டம் பெற்றவர் கால்டுவெல் : அவரைப் பற்றி தவறாக ஆளுநர் விமர்சிப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

பன்மொழிகளை அறிந்தவர், டாக்டர் பட்டம் பெற்றவர் கால்டுவெல் : அவரைப் பற்றி தவறாக ஆளுநர் விமர்சிப்பதா?

நெல்லை மண்டல பிஷப் கேள்வி

திருநெல்வேலி, மார்ச் 12- பேராயர் கால்டுவெல் டாக்டர் பட்டம் பெற்ற வர் என்று, தென்னிந்திய திருச்சபையின் நெல்லை மண்டல பிஷப் பர்ன பாஸ் கூறினார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் 10.3.2024 அன்று கூறியதாவது:
அயர்லாந்து நாட்டில் பிறந்த கால்டுவெல் 1838இ-ல் கப்பலில் இந்தியா வந்து, தமிழ் பயின்றார். 1841இ-ல் திருநெல்வேலி மாவட் டம் இடையன்குடிக்கு வந்தார். 1856இ-ல் இங்கி லாந்து விக்டோரியா மகா ராணியிடம் கவுரவ டாக் டர் (மதிப்புறு முனைவர்) பட்டத்தை கால்டுவெல் பெற்றுள்ளார்.
அதே ஆண்டில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் முனைவர் (டாக்டர்) பட்டமும் பெற்றுள்ளார்.
பல மொழிகளை கற்றவர்: இந்தியாவில் அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்ன டம் ஆகிய மொழிகளைக் கற் றாலும், தமிழ் மொழி தான் சிறந்த மொழி என்று, மற்ற மொழிக ளோடு தமிழை ஒப்பிட்டு, ஒப்பிலக்கணத்தை எழுதியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் குறித்த புத்த கத்தையும் எழுதியிருக் கிறார். அவரை கல்விய றிவு இல்லாதவர் என்று தமிழ்நாடு ஆளுநர் கூறு வது மிகவும் வருந்தத்தக் கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அய்யா வைகுண்டர்
கன்னியாகுமரி மாவட் டம் சாமிதோப்பு பால பிர ஜாபதி அடிகளார் கூறும் போது, “ஜாதிக்கு எதிராகப் போராடி சிறைக்குச் சென் றவர் அய்யா வைகுண்ட சாமி.
ஆனால், அய்யா வைகுண்டர் ஸநாத னத்தை காக்கப் பிறந்தவர் என்று ஆளுநர் கூறுகி றார். அய்யா வைகுண்டர் விழாவுக்காக ஆளுநர் மாளிகைக்கு சென் றவர்கள், உண்மையான அய்யா வழியைச் சேர்ந்த வர்கள் அல்ல” என்றார்.
தொடர்ந்து, அவர் பட் டம் பெற்றதற்கான ஆதா ரங்களை கால்டுவெல் வர லாற்று ஆய்வுக் குழுவினர் வெளியிட்டனர்.

No comments:

Post a Comment