சென்னை, மார்ச் 3- குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத் திற்கு, ஒன்றிய பாஜக அரசு, தற்காலிக பன்னாட்டு தகுதி வழங்கிய விவகாரம் கடுமையான விமர்சனங் களுக்கு உள்ளாகி இருக்கிறது.
தற்காலிகமோ – நிரந்தரமோ, பல ஆண்டுகளாக போராடி யும் மதுரை விமான நிலையத்திற்கு வழங்கப்படாத பன் னாட்டு தகுதி, ஜாம்நகர் விமான நிலையத்திற்கு மட்டும் வழங்கப்பட்டது எப்படி? என்று பலரும் கேள்விகளை எழுப்பத் துவங்கியுள்ளனர்.
பிரதமர் மோடியின் எஜமான விசுவாசம்
நவீன இந்தியாவை, மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலக்கி, ஜாதி, மதம், மொழி அடிப்படையில் பிளவுபடுத்தி, மீண்டும் பழைமைவாதத்தை நோக்கித் திருப்ப வேண்டும்; மறுபுறம் பெரும் பணக்காரர்கள் எந்தவித தடையுமின்றி இந்த நாட்டின் மக்களை, வளங்களை சுரண்டுவதற்கு ஏற்ப சட்ட – திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ப தற்காகவே பிரதமர் ஆக்கப்பட்டவர் தான் நரேந்திர மோடி. அவரும் ஆட்சி யேற்ற நாள் முதல், அதனை கனகச்சி தமாக செய்து வருகிறார்.
2014-இல் உலக பணக்காரர் வரிசை யில் 609 ஆவது இடத்தில் இருந்த அதானி, இந்த 10 ஆண்டுகளில் உலகின் 3 ஆவது பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேறுகிறார் என்றால், அதிலிருந்தே மோடியின் முதலாளிகள் ‘சேவையை’ அறியலாம்.
இந்நிலையில்தான், நாளொன்றுக்கு 6 விமானங்கள் மட்டுமே வந்து செல்லும் குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு பன்னாட்டு தகுதி வழங்கி, மற்றொரு முதலாளியான அம்பானிக்கு தனது எஜமான விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.
இரண்டு முதலாளிகள் வீட்டுக் கல்யாணம்
இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரும், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ முதலாளியுமான முகேஷ் அம்பானியின் இளைய மக னான ஆனந்த் அம்பானிக்கு ஜூலை மாதம், மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. என்கோர் ஹெல்த் கேர் (ணிஸீநீஷீக்ஷீமீ பிமீணீறீtலீநீணீக்ஷீமீ) மருந்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வைரன் மெர்ச்சண்டின் இளைய மகளான ராதிகா மெர்ச்சண்டை ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
அதற்கு முன்பாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் திருமணத் திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த 2 நாள்களாகவே தொடங்கி நடை பெற்று வருகின்றன. கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக இசை, நடனம் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்க உலகின் முன்னணி அரசியல் தலைவர்கள், பெருமுதலாளிகள், விளையாட்டு வீரர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பிரபலங்கள் ஜாம் நகர் வந்த வண்ணம் உள்ளனர்.
ஜாம் நகரில் குவிந்த உலகப் பணக்காரர்கள்
குறிப்பாக சொல்ல வேண்டுமா னால், உலகின் முன்னணி பணக்கா ரர்களான பில்கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், பாடகியும் தொழிலதிபருமான ரிஹானா, அமெரிக்க மேனாள் அதிபர் டிரம்பின் மகளும் தொழிலதிபருமான இவாங்கா டிரம்ப் உள்ளிட்டவர்கள் ஜாம்நகருக்கு வருகை புரிந்துள்ளனர்.
இவ்வாறு உலகின் பெருமுதலாளிகள் பலரும் வருவதால், அவர்களுக்காக 10 நாள்களுக்கு ஜாம்நகர் விமான நிலையத்தை, பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்து, ஒன்றிய பாஜக அரசு தனது எஜமான விசுவாசத்தை வாலையாட்டிக் காட்டியுள்ளது. பிப்ரவரி 25 துவங்கி மார்ச் 5 வரை, ஜாம்நகர் விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங் களை தரையிறக்க அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்பாடுகளில் களமிறங்கிய 3 ஒன்றிய அமைச்சகங்கள்
அதுமட்டுமன்றி, அம்பானி வீட்டு திருமணத்திற்கு வரும் முதலாளிகளை மகிழ்விப்பதற்காகவே, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம், உள்துறை அமைச்ச கம் ஜரூராக செயல்பட்டு, ஜாம்நகர் விமான நிலையத்தில் பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வந்த ஜாம்நகர் விமான நிலையத்தில், வணிக விமானங்கள் அனுமதிக்கப்படும் என்று அறிவித்து, இதற்காக, அங்கு பயணிகள் முனைய கட்டடத்தையும் இந்திய விமான நிலைய ஆணையம் கட்டியுள்ளது. அதுமட்டுமல்ல, அம்பானி வீட்டு திருமணத் திற்காக அதி முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப பகுதி களில் விமானங்க ளை (ஒரே நேரத்தில் மூன்று விமா னங்களை) தரையிறக்கவும் இந்திய விமானப்படை அனுமதி வழங்கி யுள்ளது.
ஜாம்நகர் விமான நிலையமானது, 6 விமானங்கள் மட் டுமே வந்து செல்லக் கூடியதாகும். ஆனால், 1-3-2024 அன்று மட்டும் 140 விமானங்கள் வந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
அம்பானி வீட்டு திருமணத்திற்கு அதிக எண்ணிக்கையில் விருந்தி னர்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு பயணிகள் கட்டடத்தை 475 சதுர மீட்டரில் இருந்து 900 சதுர மீட்டராக இந்திய விமான நிலைய ஆணையம் விரிவாக்கம் செய்துள்ளது. விரிவாக்க பணிகள், முன்பே திட்டமிட்ட போதிலும், தற்போது அது விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
மோடி அரசின் இந்த எஜமான சேவை கடும் விமர் சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
எங்கள் கோரிக்கையை இதுவரை ஏற்காதது ஏன்?
மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், மதுரை மக்கள வைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் (சிபிஎம்), விமான நிலையம் அமைந்திருக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் ஆகியோர் தங்களின் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
“மோடி அரசின் மெகா ‘மொய்’ என்று தலைப்பிட்டு ‘எக்ஸ்’ பக் கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு பன்னாட்டு விமான நிலைய தகுதி. 6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு. ஆனால் மதுரையின் பல ஆண்டு பன்னாட்டு விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 ஆவது பன்னாட்டு விமான நிலை யம் என்று கேள்வி கேட்டவர்கள் தான் இவர்கள் (ஒன்றிய பாஜக அரசு).” என்று சு.வெங்கடேசன் எம்.பி., சாடியுள்ளார்.
பாகுபாட்டின் உச்சம் இது;
தமிழ்நாட்டிற்கு நியாயம் வேண்டும்
“பிரதமர் மோடி அவர்களே, 10 நாள் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக கேட்டும், மதுரை விமான நிலையம் இன்னும் பன்னாட்டுத் தகுதிக்காக காத்திருக்கிறது. பாகுபாடு உச்சத்தில் இருக்கிறது. தமிழ் நாட்டுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பாகு பாட்டை நிறுத்துங்கள்” என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment