நாகபுரி, மார்ச் 18- “தேர்தல் பத் திரங்கள் என்பவை ஒரு பரிசோ தனை முயற்சி. அவை எந்த அள வுக்குப் பயனளிக்கும் என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்’ என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செய லாளர் தத்தாத்ரேய ஹொசபாலே தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக தத்தாத்ரேய ஹொசபா லேவை அந்த அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதி சபை நேற்று (17.3.2024) மீண்டும் தேர்வு செய் தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பொறுப்பை வகிப் பார். இந்நிலையில், தேர்தல் பத் திரங்கள் குறித்து தத்தாத்ரேய ஹொசபாலேவிடம் செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தேர்தல் பத்திரங்கள் என்பவை ஒரு பரிசோதனை முயற்சி. அது குறித்து ஆர்எஸ்எஸ் இன்னமும் விவாதிக்கவில்லை.
தேர்தல் பத்திரங்கள் திடீ ரென்று அறிமுகம் செய்யப்பட வில்லை. இதற்கு முன்பும் இவை கொண்டுவரப்பட்டுள்ளன. எப் போது ஒரு மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டாலும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறி முகம் செய்யப்பட்டபோதும் அவை குறித்து கேள்விகள் எழுப் பப்பட்டன.
புதிய விஷயங்கள் அறிமுக மாகும்போது மக்களால் கேள்வி கள் எழுப்பப்படுவது இயல்புதான். தேர்தல் பத்திரங்கள் எந்த அளவுக் குப் பயனளிக்கும் என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்.
நரேந்திர மோடி அரசின் பத் தாண்டு கால ஆட்சியைப் பொறுத் தவரை, பொது சிவில் சட்டத்தை ஆர்எஸ்எஸ் வரவேற்கிறது. அதை அமல்படுத்துமாறு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதிநிதி சபையில் சில ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலாகியுள்ளது. இச்சட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க வேண் டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
வாரிசு, தத்தெடுப்பு, திருமணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகே பொது சிவில் சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
ஒன்றிய பாஜக அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர். தற்போதைய நூற்றாண்டு என்பது இந்தியாவின் நூற்றாண்டு என்று பிரபலமான பன்னாட்டு நிபுணர்க ளும் அரசியல் சிந்தனையாளர்க ளும் வலியுறுத்தியுள்ளனர்.
ஒன்றிய பாஜக ஆட்சி குறித்த தீர்ப்பை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி மக்கள் வழங்கு வார்கள். மதுரா, காசி ஆகிய இடங் களில் வழிபாட்டுத் தலங்கள் தொடர் பான தகராறுகள் குறித்துக் கேட்கிறீர் கள். இந்த விவகாரத்தை ஹிந்து மதத் துறவிகளும் விசுவ இந்து பரிசத் அமைப்பினரும் எழுப்பியுள்ளனர்.
ராஜ ஜென்மபூமி இயக்கத்துக்கு செய்யப்பட்டதை அனைத்து விவ காரங்களுக்கும் செய்யத் தேவையில்லை. மதுரா, காசி ஆகிய இடங் களில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
அதை நீதிமன்றம் தீர்த்து வைக்கும். இதற்காகப் போராட வேண்டியதில்லை என்றார்.
No comments:
Post a Comment