காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 18 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் , ஜனநாயகத்தை காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தையும் நமது அரசமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம். வெறுப்பு, கொள்ளை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக ‘இந்திய மக்களாகிய நாங்கள்’ ஒன்று சேர்ந்து போராடுவோம். என தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை, 30 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உட்பட பல வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.
இந்நிலையில், மேலும் 5 தேர்தல் வாக்குறுதிகளை கார்கே நேற்று (17.3.2024) வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர் தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் தொழிலாளர் நீதி (ஷிரமிக் நியாய்), அனைவரும் உள்ளடக்கிய நீதி (ஹிசதரி நியாய்) ஆகியவை செயல் படுத்தப்படும்.
அனைவரும் உள்ளடக் கிய நீதியின்படி சமூக, பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் படும். அரசு நிறுவனங்களில் சமூக, பொருளாதார, மக்கள் தொகையின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். மேலும், தாழ்த்தப்பட் டோர், பழங்குடியினர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் 50 சதவீதமாக உயர்த்தப்படும். அத்துடன் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு சட்டப் பூர்வமான சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும். பழங்குடியினத்தவர்களின் வன உரிமைகள் பாதுகாக்கப்படும். அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் ஓராண்டுக்குள் தீர்த்து வைக்கப்படும்.
பழங்குடியினத்தவருக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் திரும்ப பெறப்படும். தொழிலாளர் உரிமை: அதேபோல் தொழிலாளர்களின் உரி மைகள் சமூக பாதுகாப்பு உறுதி செய் யப்படும். அதில் மருத்துவ உரிமை, ஒரு நாளைக்கு தேசிய அளவில் ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment