கருநாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார்மீது அமலாக்கத்துறை வழக்கு ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 6, 2024

கருநாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார்மீது அமலாக்கத்துறை வழக்கு ரத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி,மார்ச் 6- கருநாடக காங் கிரஸ் தலைவரும், துணை முதலமைச் சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடு களில் கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது, டில்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரூ.8 கோடி ரொக்கம் கிடைத்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அவர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்தது. மேலும் அவர் மீது சட்டவிரோதமாக சொத்து சேர்த் ததாக சி.பி.அய். வழக்கு தாக்கல் செய்தது.

தன் மீதான சட்டவிரோத பணமரிமாற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிவக் குமாரின் மனு மீது நேற்று (5.3.2024) விசாரணை நடைபெற்றது. அப்போது சிவக்குமார் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்து நீதிபதிகள், உத்தரவிட்டனர்.

அவரது வீட்டில் சிக்கிய பணம், சட்ட விரோத பண பரிமாற்றத்தால் கிடைத்த பணம் என்பதை அமலாக்கத்துறை நிரூபிக்க வில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இதே வழக்கில் சிவக்குமார் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள சிவக்குமார், தனக்கு இன்று மிகப்பெரிய மகிழ்ச்சியான நாள் என்று கூறி தீர்ப்பை வரவேற் றுள்ளார்.

No comments:

Post a Comment