கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 19, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

19.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும் – பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்தல் பத்திர விவரங்கள் அனைத்தையும் மார்ச் 21க்குள் வெளியிட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு உச்ச நீதிமன்றம் கட்டளை.
* தமிழிசை சவுந்தரராசன் ஆளு நர் பதவியில் இருந்து விலகல் – தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட ஆர்வம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “சக்தி என்று நான் பேசியது மோடி ஆட்சியின் அதிகாரம் குறித்து. ஆனால், பிரதமர் மோடி எனது வார்த் தைகளை திரித்து பேசியுள்ளார். நான் குறிப்பிட்ட அந்த அதிகார சக்தியின் முகமூடிதான் மோடி. அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்” என மோடி பேச்சு குறித்து ராகுல் ஆவேச பதிலடி கொடுத்துள்ளார்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அமைச்சரும், ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் (ஆர்எல்ஜேபி) தலைவருமான பசுபதி குமார் பராஸ் கட்சிக்கு பாஜக தொகுதி பங்கீடு கிடையாது – ராம் விலாஸ் பஸ்வான் மகனை சேர்க்க முடிவு.
* பொன்முடிக்கு பதவி – பிரமாணம் செய்து வைக்க மறுப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
* இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட முப்பத்தைந்து மருந்து நிறுவனங்கள், தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.1,000 கோடி நன்கொடை அளித்துள்ளன – குறிப்பாக கவலைக்குரியது என்னவென்றால், இவற்றில் குறைந்தது ஏழு நிறுவனங்களாவது பத்திரங்களை வாங்கும் போது தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்ததற்காக வருமான வரித்துறை விசாரணைக்கு உட்பட்டுள்ளன.
தி இந்து:
* பிரதமர் மோடி பெயரில் “விக்சித் பாரத் சம்பார்க்” கணக்குகளில் இருந்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு அனுப் பப்பட்ட செய்திகள் குறித்து ஒன்றிய அரசை கண்டித்த காங்கிரஸ், இந்த செய்திகள் தேர்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறுவதாகக் குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
தி டெலிகிராப்:
* 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும் என்ற மோடி அரசின் வாக்குறுதி ஒரு “மோசடி” ஆகிவிட்டது என்றும், “மோடி கி உத்தரவாதம்” “பொய்களின் சக்தியுடன்” கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தாக்கு.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment