ஜார்க்கண்ட் அரசு 2024-2025 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் நிதி நிலை அறிக்கை இது. இதில் அங்கு மறுமணம் செய்துகொள்ளும் விதவைப் பெண்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கவுள்ளதாக அரசு நிதி நிலை அறிக்கை அறிவிப்பில் தெரிவித்தது. இதனை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் விதவை மறுமண ஊக்குவிப்புத் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் முறைப்படி தொடங்கி வைத்தார்
இத்திட்டம் குறித்து பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறை செயலர் மனோஜ் குமார் கூறுகையில்,
“எந்த விதவை மறுமணம் செய்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்; திருமணமான ஒரு ஆண் டிற்குள்.. ரூ. 2 லட்சம் வழங்கப்படும். நமது சமூகத் தில் உள்ள விதவைகள் கண்ணியமாக நடத்தப் படுவதில்லை – அவர்கள் சுரண்டப்படுகிறார்கள் – சமூகத்தில் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுகின்றனர்; இந்த மாநிலத்தின் வளர்ச்சியில், சமூகம் மற்றும் நாட்டின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பிற்கு அவர்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. இதன் மூலம் சமூகத்தின் பன்முகத்தன்மை ஏற்படும்” என்று கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் சிந்தனைகள் வடமாநி லங்களிலும் வேர்ப் பிடிக்கத் தொடங்கி விட்டது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!
முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தம் பிறந்த நாளில் 1975 ஜூன் 3ஆம் தேதி அறிவித்த திட்டம்தான் கைம்பெண்களுக்கு உதவும் மறுவாழ்வுத் திட்டம்!
கணவன் இறந்தால் மனைவியை உடன்கட்டை ஏற்றும் கொடுமை வட மாநிலங்களில் சர்வ சாதா ரணம் – இதுதான் அர்த்தமுள்ள (?) இந்து மதத்தின் முக்கிய அம்சம். ராஜஸ்தானில் சதி மாதா கோயில் நம் காலத்திலேயே எழுப்பப்பட வில்லையா?
ராஜாராம் மோகன்ராய் முயற்சியால் வெள் ளைக்காரர் ஆட்சியில் அதற்கு முடிவு கட்டப் பட்டது.
ஜெகத் குரு என்று பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சதியை வரவேற்றவர் தானே!
“ஆஞ்ச நேயரின் வாலில் வைத்த நெருப்பு ஸீதையின் பாதி வரத்யத்தால் (கற்புச் சக்தியால்) அவரைப் பாதிக்காமலேயே இருந்தது. குமரில பட்டர் உமிக்காந்தல் அக்னியில் கருகுகிறபோது எதிரே நின்ற (சங்கர) ஆச்சாரியாரின் ஸாந்தியத்தால், அவருக்கு உஷ்ணமே தெரியாமல் ஜில்லென்று இருந்தது. அனேக பதிவிரதைகளுக்கு அவர் களுடைய பதி பக்தியினாலேயே சிதாக்னி சந்தனமாக இருந்திருக்கிறது. அவர்கள் கட்டி யிருந்த புடவை அத்தனை அக்னியிலும் எரியாமல் இருக்குமாம். அதை எடுத்து வைத்துப் பூஜை பண்ணுவதுண்டு! (“தெய்வத்தின் குரல் 2ஆம் பகுதி “உடன்கட்டை ஏறுதல்” என்ற பகுதி பக்கம் 967,968) என்கிறாரே சங்கராச்சாரியார்.
ஹிந்து மதவாத ஸநாதனங்களைத் தாண்டித் தான் தமிழ்நாட்டைப் போல ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் விதவையருக்கான மறுவாழ்வு திட்டம் செயல் பாட்டுக்கு வந்துள்ளது.
பாராட்டுகள் – வாழ்த்துகள்!
Saturday, March 9, 2024
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment