கோட்டைக்குள் குத்து வெட்டு பீகாரில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 20, 2024

கோட்டைக்குள் குத்து வெட்டு பீகாரில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் அறிவிப்பு

பாட்னா, மார்ச் 20- பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் – ராஷ்ட் ரிய ஜனதா தளம் – அய்க்கிய ஜனதா தளம் – இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் “மகா கூட் டணி” ஆட்சி நடைபெற்று வந் தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் இருந்தார். கடந்த ஜனவரி மாத இறுதியில் பாஜக வின் மிரட்டல் மற்றும் அப் போதைய துணை முதல மைச் சரான ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வியின் அசாத் திய மக்கள் நலன் செயல்பட்டால் கலக்கமடைந்த நிதிஷ்குமார் “மகா” மற்றும் “இந்தியா” கூட் டணியில் இருந்து ஓட்டம் பிடித்து மீண்டும் பாஜக உடன் கைகோர்த்து மீண்டும் முதலமைச்சரானார்.

நிதிஷ் குமார் முதலமைச் சராக இருந்தாலும் முக்கியத் துறை கள் அனைத்தும் பாஜக விடமே உள்ளது. அதாவது பாஜக சார்பில் இரண்டு துணை முதலமைச்சர்கள் உள்ள னர். அவர்கள் வசமே அதிகார மிக்க துறைகள் உள்ளன. நிதிஷ்குமார் பெயர ளவிற்கு முதலமைச்சர் நாற் காலியில் அமர்ந்து பொழுதை கழித்து வருகிறார்.

இந்நிலையில், பீகார் மாநி லத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத் தப்பட மாட்டாது என நிதிஷ் குமா ரின் அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் காலித் அன்வர் அறி வித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”பீகார் மாநிலத்தில் வசிக்கும் 13 கோடி மக்களும் பீகாரிகளே. இதனால் மாநி லத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடி மக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள் பதிவேடு (என்பிஆர்) எதுவும் தேவைப் படாது என ஏற்கனவே முதல்வர் நிதிஷ்குமார் தெளிவு படுத்திவிட்டார். பீகார் மாநி லத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடமில்லை” என அவர் கூறியுள்ளார்.

கலக்கத்தில் பாஜக

நடக்கவிருக்கும் மக்கள வைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறவே ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத் தச் சட்டத்தை அமல்படுத்தும் விதிகளையும், அதற்கான ஆன்லைன் தளத்தையும் அறி முகப்படுத்தியுள்ளது. “இந் தியா” கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பை கண்டு கொள்ளாமல் சிஏஏ சட் டத்தை கண்டிப்பாக அமல் படுத்துவோம் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொக்க ரித்துள்ள நிலையில், தனது கூட்டணி கட்சியான அய்க்கிய ஜனதாதளம் பீகா ரில் சிஏஏ சட்டத்தை அமல் படுத்தமாட்டோம் எனக் கூறியிருப்பது மோடி – அமித் ஷாவிற்கு கலக்கத்தை ஏற் படுத்தியுள்ளது.

பாஜக – அய்க்கிய ஜனதாதள கூட்டணியில் குழப்பம்

நிதிஷ் குமார் “மகா” கூட் டணியில் முதலமைச்சராக இருந்த பொழுது சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அந்த கருத்தையே காலித் அன்வர் தற்போது கூறியுள்ளார். ஆனால் காலித் அன்வரின் கருத்து அய்க்கிய ஜனதா தளத்தின் தற்போதைய நிலைப் பாடாகவே அறிவிக்கப்பட் டுள்ள தாகவும் தகவல் வெளி யாகியுள் ளது. பீகாரில் 17.70 சதவீத முஸ்லிம் மக்கள் உள் ளனர். சிஏஏ விதிகள் அமல் படுத்தப்பட்டால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதறும் என் பதை கருத்தில் கொண்டு நிதிஷ் குமார், காலித் அன் வரின் கருத்து தொடர்பாக எவ்வித கருத்தும் கூறா மல் அமைதி காத்து வருவதாக தக வல் வெளியாகியுள்ளது. தேர்த லுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில், சிஏஏ மூலம் பீகாரில் பாஜக – அய்க்கிய ஜனதாதள கூட்டணிக்குள் குழப் பம் ஏற்பட்டுள்ளது. சிஏஏ விவகாரம் மூலம் பாஜக கூட்டணியில் இருந்து வழக்கம் போல நிதிஷ் குமார் ஓட்டம் பிடித்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாஜக அவரை தீவி ரமாக கண்காணித்து வருவ தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.

No comments:

Post a Comment