சலவைத் தொழிலாளர்களுக்கு "கியாஸ் இஸ்திரி பெட்டி" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

சலவைத் தொழிலாளர்களுக்கு "கியாஸ் இஸ்திரி பெட்டி"

featured image

சலவைத் தொழிலாளர்களுக்கு “கியாஸ் இஸ்திரி பெட்டி” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, மார்ச்.9- சலவைத் தொழிலாளர் களுக்கு எல்.பி.ஜி. கியாஸ் மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சுற்றுச்சூழலுக்கு கேடு

சலவை தொழிலாளர்கள் கரிக்கட்டை மூலம் பித்தளை இஸ்திரிபெட்டியால் துணிம ணிகளை தேய்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த தொழிலில் கரிக்கட்டை பயன்படுத்துவதால் தொழிலாளர்கள் சுவாசப் பிரச்சினை பாதிப்பை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. மேலும் சுற்றுச் சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியன் ஆயில் நிறு வனம் எல்.பி.ஜி. கியாஸ் மூலம் இஸ்திரி போடும்வகை யில் நவீன தொழில்நுட் பத்தை புகுத்தியது.

ரூ.29 லட்சத்து 93 ஆயிரம் …

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சலவை தொழிலை மேற் கொள்ளும் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து மதிப் பீட்டில் 500 எல்.பி.ஜி.இஸ்திரி பெட்டிகளை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் வாங்கியது.
இதில் முதற்கட்டமாக 75 தொழிலாளர் களுக்கு இந்த இஸ்திரிபெட்டி வழங்கப்பட் டது. இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (8.3.2024) நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் 10 தொழிலாளர்களுக்கு எல்.பி.ஜி. கியாஸ் மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துறை யின் அமைச்சர் ராஜகண் ணப்பன் உள்ளிட்டோர் கலந் துகொண்டனர்.

தமிழறிஞர்களுக்கு குடியிருப்புகள்

இதேபோல் தமிழ் வளர்ச் சித்துறை சார்பில் கனவு இல் லத் திட்டத்தின் கீழ் 10 தமிழ றிஞர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், 2 தமிழறிஞர்களுக்கு குடி யிருப்புக்கான நிர்வாக அனுமதி ஆணை களையும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நா நாதன், தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித்துறை செயலாளர் இல.சுப்பிர மணியன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச் சித்துறை இயக்குநர் அவ்வை அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment