சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நகர குடும்ப நல மய்யத்தில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி சென்னை மாவட்ட பெருநகர மருத்துவ சேவைகள் துறை மூலமாக கடந்த 3.3.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.
மேலும் இம்மய்யம் சார்ந்த மொத்த மக்கள் தொகையான 50,257இல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் 3,795 (ஆண்/பெண்) என அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு தன்னார்வ தொண்டு மகளிர், மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி செவிலிய மாணவிகள் மற்றும் சத்துணவு மய்ய பணியாளர்கள் என மொத்தம் 64 பேர் கலந்து கொண்டு இம்மய்யத்தின் மக்கள் தொகை பகுதிகளான டிவிஷன்கள் முறையே 57 (ஒரு பகுதி மட்டும்), 58 (ஒரு பகுதி மட்டும்), 59 (ஒரு பகுதி மட்டும்), 61 (ஒரு பகுதி மட்டும்) என 17 நிரந்தர முகாம்கள் மற்றும் 1 இயங்கும் முகாம் என 18 போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைத்து 5 வயதிற்கு உள்பட்ட (ஆண்/பெண்) இருபாலருக்குமாக 3,795 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3.3.2024, 4.3.2024 மற்றும் 5.3.2024 என மூன்று நாள்கள் தன்னார்வத் தொண்டு மகளிர் மற்றும் அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் சத்துணவு மய்ய பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து 3,893 குழந்தைகளுக்கு இம்மய்யத்தின் சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment