திறந்த நிலை பல்கலைக்கழகப் பட்டங்கள் யு.ஜி.சி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 12, 2024

திறந்த நிலை பல்கலைக்கழகப் பட்டங்கள் யு.ஜி.சி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

featured image

சென்னை, மார்ச்.12– திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுகளுக்கு செல்லாது என்ற பிரச்சினை தேசிய அளவில் உருவெடுத்துள்ளதால், இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) தீர்வு காணவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதவி உயர்வு
சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியில் சேர்ந்த செண்பகம், ராஜேஷ், பத்ம பிரியா ஆகியோர் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று அதன் அடிப்படையில் பிரிவு அதிகாரி என்ற பதவி உயர்வை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, தங்களை உதவிப் பதிவாளர் பணிக்கான பதவி உயர்வுப் பட்டியலில் சேர்க்க கோரி இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.
இதேபோல், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்க ளுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது என்று சீனிவாசன், இளங்கோவன், சுந்தராஜன் உள்ளிட்ட 26 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி யிருப்ப தாவது.

தேசிய பிரச்சினை
திறந்தநிலை பல்கலைக்கழகங்க ளில் பட்டம் பெற்றவர்கள் உதவி பதிவாளர் பதவி உயர்வு வழங் கக்கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேநேரம், அவர்களுக்கு ஏற்கெனவே பிரிவு அதிகாரிகளாக வழங்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் பணப் பலன் களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
திறந்தநிலை பல்கலைக்கழகங் களின் பட்டங்களை, அரசு, பொதுத்துறை, பல்கலைக்கழக வேலைவாய்ப்புகளுக்கு செல்லாது என்று அறிவிப்பதால் ஏற்படும் பிரச்சினை என்பது தேசிய அள வில் உருவெடுத் துள்ளது.

சட்டத் தீர்வு
நாடு முழுவதும் லட்சக்கணக்கா னோர் இதுபோன்ற சிக்கலில் உள்ளனர். இதற்கு சரியான சட்ட ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்கும் வகையில் உரிய நட வடிக்கைகளை பல்கலைக்கழக மானியக் குழு எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment