சென்னை,மார்ச் 21- நாடாளு மன்ற தேர்தலை முன்னிட்டு அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண் டுதோறும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த தேர்வு மூன்று நிலைகளைக் கொண்டது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் தேர்வு என 3 நிலைத் தேர்வுகள் நடத்தப்படும்.
முதல்நிலை தேர்வில் தேர்ந் தெடுக்கப்பட்ட நபர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் நேர்காணலுக்கு செல்கின் றனர்.
இறுதியாக, முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப் பெண்கள் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் வெளியிடப் படும்.
இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் பல்வேறு பதவி கள் நிரப்பப்படுகின்றன.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு களை மே 26ஆம் தேதி நடத்த தேர்வாணை யம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள் ளது.
தேர்தல் முடிவு ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து மே 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட் டிருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு, ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment