சென்னை, மார்ச் 22- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலு வலகம் முன் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டில்லியில் மதுபான கொள் கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டில்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை அழைப்பானை அனுப்பியது. ஆனால், அமலாக்கத்துறையின் அழைப்பானை சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.
எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தேசிய அரசி யல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அவர் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இடங் களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின் றன. இந்நிலையில் கெஜ்ரிவால் கைதை கண் டித்து திமுக சார்பில் சென்னையில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்றார். அப்போது அவர் பேசிய தாவது:
மோடி அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் பார்த்தோமானால் பாஜகவினர் செய்த ஊழல் களை எல்லாம் மறைத்து ஏதோ அவர்கள் நல்லவர்கள் போல் பேசி வருகிறார். மோடி அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளது. அதைப்பற்றி ஒரு விசாரணை நடக்கவில்லை. கடந்த ஆண்டு துணை முதலமைச்சரை கைது செய்தார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு முதலமைச்சர் என்று கூட பாராமல் கைது செய்து இருக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஏன் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழலை சிபிஅய் விசாரிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேயர் பிரியா சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்
Friday, March 22, 2024
டில்லி முதலமைச்சர் கைது தயாநிதி மாறன் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment